ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவிற்கு தற்போது ஆஸ்கர் குழு அழைப்பு விடுத்துள்ளது. இது தென்னிந்தியாவிலேயே ஒரு நடிகருக்கு அழைப்பு விடுப்பது இதுவே முதல் முறையாகும். இந்த பெருமை தற்போது சூர்யாவை அடைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பட்டியலை ஆஸ்கார் என்று வெளியிட்டது. அதன்படி அதில் சூர்யாவும் நடிகை கஜோல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது அகடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நிறுவனத்தில் சேர 397 புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழில் ரீதியான தகுதி அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைக் கொண்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இந்தாண்டு தேர்வாளர்களின் பட்டியலில் சூர்யாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது அவரோடு சேர்த்து இந்தியில் பிரபல நடிகையான கஜோல் பெயரும் இடம்பெற்றுள்ளது.
மீனாவின் கணவர் இறந்ததற்கு புறா தான் காரணமா ? | பீதியை கிளப்பியிருக்கும் மருத்துவ குழு

இந்த சாதனையை படைத்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் நடிகர் சூர்யாவை பாராட்டி ஒரு ட்வீட் செய்திருக்கிறார் அதில் அவர் கூறியதாவது :- தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை! …. இவ்வாறாக அவர் நடிகர் சூர்யாவை பாராட்டி பேசி உள்ளார். இதை தற்போது சூர்யா ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
