ராணிப்பேட்டை முதல்வர் விழாவில் ஸ்டாலின் அவர்கள், பெற்றவர்களைப் போல திமுக அரசும் செயல்படும் என்றும் என்னை நிறைய பேர் விளம்பரத்திற்காக செயல்படுகிறேன் என கூறுகின்றனர் என மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.
அதில் அவர் பேசியதாவது :- “பெற்றவர்களைப் போல் இந்த திமுக அரசும் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன், மக்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் பார்த்து பார்த்து நான் செய்வேன். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சியினரும் சில உதிரி கட்சியினரும் நான் தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக்கொண்டு அனாதையாக அலைந்து கொண்டிருப்பவர்கள் பேசுகின்றனர்.

ஆனால் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை நான் சட்டமன்றத்திலேயே பட்டியல் போட்டிருக்கிறேன். நான் விளம்பர பிரியராக இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். எனக்கு எதற்கு விளம்பரம் இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா. 55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கக்கூடிய எனக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை.
திமுக அரசின் திட்டங்கள் எதுவும் விளம்பரத்திற்காக செய்ததில்லை. அது மக்களுக்காக மட்டுமே செய்தது. விளம்பரம் எனக்கு தேவையும் இல்லை, தேவையும் படாது. ஏற்கனவே எனக்கு கிடைத்திருக்கும் புகழையும் பெருமையும் காப்பாற்றினாலே எனக்கு போதுமானது. திராவிட மாடல் என்றால் காலமெல்லாம் எனது முகம் தான் மக்களின் மனதில் நினைவுக்கு வரும்” என மு க ஸ்டாலின் மிகவும் உருக்கமாக அந்த விழாவில் பேசியுள்ளார்.
