வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை இன்று நடைபெற்றது. அந்தப் பேரவையில் தமிழக முதலமைச்சர் காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது பேசியதாவது :- “உலகம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கிறது தமிழினம். அந்த தமிழர்கள் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற இலக்கு தான் இந்த திராவிடமாடல் அரசு செயல்பட்டு வருகிறது. உலகிலேயே மூத்த மொழியான தமிழுக்கு சொந்தக்காரர்கள் நாம். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தமிழர்களின் நலம் காக்க நடவடிக்கைகளில் எடுத்து வருகின்றோம். உலகத்தில் எங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தாய்வீடு என்றால் அது தமிழ்நாடு தான். பழம்பெருமை பேசுவது ஒன்றும் தவறல்ல, ஏனென்றால் அத்தகைய பழமையை நாம் கொண்டிருக்கிறோம். ஸ்ரீ என்பதற்கு பதிலாக திரு என்று மாற்றி ஸ்ரீமதி என்பதற்கு திருமதி என்று வழக்கை நாம் கொண்டு வந்தோம்.

திமுக ஆட்சிக்கு வந்தது பின் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற பெயரில் கோயில்களில் தமிழ் அர்ச்சனை என தொடங்கியது. நான் இந்த திராவிடம் என்ற சொல்லை திட்டமிட்டு தான் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறேன். மேலும் திராவிடத்திற்கு எதிரானவர்கள் இதை எதிர்க்கிறார்கள். இத்தகைய எதிரிகள் 1000 ஆண்டுகளாக நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். இவர்களை நாம் இனம் கண்டு கொள்வோம். மேலும் இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் ஈழத்தில் இருந்து தான் தொடங்கி எழுத வேண்டும் என்பதற்காக சான்றுகளும் ஆய்வுகளும் உறுதி செய்யும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசினேன். இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்து என்னால் ஆன உதவிகளை இந்த அரசு எப்போதுமே செய்து கொண்டே வரும்” என இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
