தலயை வாழ்த்திய தளபதி | என்ன கூறியிருக்கிறார் தெரியுமா

இன்று பிறந்தநாள் காணும் தல தோனிக்கு நம்முடைய தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் உற்சாக வாழ்த்தினை அளித்திருக்கிறார்.

எம் எஸ் தோனி யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ரசிகர்கள் உலகம் எங்கும் அவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவரின் சாதனைகள் கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த அளவிற்கு தனக்கென ஒரு தனி சகாப்தத்தை படைத்து இந்திய கிரிக்கெட்டை உலகறிய செய்தவர் எம் எஸ் தோனி. பல வருடங்களாக இந்தியாவிற்கு கேப்டன் செய்து பல மேட்ச்களை திறம்பட ஃபினிஷ் செய்து தன்னை ஒரு ஃபினிஷர் ஆகவும் சிறந்த கேப்டனாகவும் காட்டியுள்ளார் எம் எஸ் தோனி. கிரிக்கெட் உலகில் இவருக்கு நிகர் இவரே என கூறும் அளவிற்கு பல சாதனைகளை புரிந்தவர் இவர்.

இவருக்காக திருவனந்தபுரத்தில் 42 அடி கட்அவுட் வைத்து ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்தை தோனிக்கு தெரிவித்து இருக்கின்றனர். தற்போது ட்விட்டரிலும் தோனி குறித்து பல ஹாஷ் டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இவர் ஐபிஎல் இல் சென்னை அணிக்காக விளையாடுவதால் இவரை ரசிகர்கள் செல்லமாக தல என அழைப்பார்கள். இவருக்கு தல தோனி என ஒரு சிறப்பு பட்டமும் தமிழக ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

தற்போது இவருக்கு வாழ்த்து கூறும் வகையில் நம்முடைய தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் ஒரு பதிவை ட்விட்டரில் டுவிட் செய்திருக்கிறார் அதாவது :- “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி, உங்கள் இணையற்ற சாதனைகள் எளிய கிராமப்புற பின்னணியிலிருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளை தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்” என இப்படியாக அந்த டிவிட்டை ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.

தற்போது இந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தலயை வாழ்த்திய தளபதி என பலரும் இதைக் கூறி வருகின்றனர். மேலும் இன்று பிறந்தநாள் காணும் எம் எஸ் தோனி அவர்களுக்கு நாமும் வாழ்த்து கூறுவோம்.

Spread the love

Related Posts

பாகிஸ்தான் மாணவர்கள் உயிருடன் உக்ரைனிலிருந்து தப்பிக்க உதவிய இந்திய தேசிய கோடி

உக்ரேனில் தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு தங்கி படிக்கும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த

“எந்த பெண்ணுக்கு பிரபோஸ் செய்தாலும் பிளாக் செய்கிறார்கள், எனக்கு இந்த ஆப் பிடிக்கவில்லை” – பயனர் ஒருவரின் ஆப் ரிவியூ வைரல்

எந்த பெண்ணுக்கு பிரபோஸ் செய்தாலும் பிளாக் செய்கிறார்கள். எனக்கு இந்த ஆப் பிடிக்கவில்லை என பயனர்

கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டு சேரும் சுதா மற்றும் சூர்யா காம்போ | ப்பா வேற லெவல் அப்டேட்டா இருக்கே

கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக சுதா கொங்கராவை வைத்து ஒரு படம்