“ஆரோன் பின்ச்க்கு அடுத்ததாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவது நான் தான்….” – ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஸ்டீவன் ஸ்மித்

ஆரோன் பின்ச்ற்கு அடுத்ததாக ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவது நான் தான் என ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ள ஸ்டீவன் ஸ்மித்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்கு பல வெற்றிகளை தேடித் தந்த கேப்டன் தான் ஆரோன் பின்ச். இவருடைய கேப்டன்சி காலத்தில் ஆஸ்திரேலியா ஒரு வலுவான அணியாக தென்பட்டது. இந்தியாவிலும், இங்கிலாந்திலும், ஒரு நாள் போட்டியில் கடைசி பத்து ஆண்டில் வெற்றி பெற்ற ஒரே அணி ஆஸ்திரேலிய மட்டும் தான் என பெயரையும் சம்பாதித்துக் கொடுத்தார்.

மேலும் 2019 ல் நடந்த முடிந்த உலக கோப்பையில் செமி பைனல் வரை ஆஸ்திரேலியாவை கொண்டு சென்றார். அதன் பிறகு சென்ற வருடம் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவை சாம்பியன் ஆக்கினார். இத்தகைய பெருமைகளை கொண்ட ஆரோன் பின்ச்க்கு கடந்த ஒரு சில மாதங்களாக பேட்டிங் பார்ம் சரி இல்லாததால் தாமாகவே முன்வந்து ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனால் இப்படிப்பட்ட ஒரு வெற்றிகரமான கேப்டன் ஓய்வு பெறுகிறார் அதற்கு அடுத்து இந்த வெற்றிடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என்ற ஒரு கேள்வி ஆஸ்திரேலியா ரசிகர்களிடம் இருந்து வருகிறது. ஏறத்தாழ முன்னாள் கேப்டன் ஸ்மித் தான் இருப்பார் என்று அதிகம் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் தற்போது ஸ்டீவன் ஸ்மித் அவர்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது நேற்றைய ஆட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டீவன் ஸ்மித் இது குறித்து பேசி உள்ளார்.

மீண்டும் தாத்தாவான ரஜினி | பையனுக்கு “வணங்காமுடி” என பெயர் சூட்டியிருக்கும் ரஜினியின் மகள் சௌந்தர்யா

அப்போது நிருபர் :- “ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட்க்கு அடுத்த கேப்டனாக நீங்கள் இருப்பீர்களா என கேட்டதற்கு, “இல்லை எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது, நிர்வாகம் என்ன யோசிக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கும் வயது ஆகிக்கொண்டே போகிறது அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து அடுத்ததாக ஓய்வு பெறப்போவது நானாகத்தான் இருப்பேன், அதனால் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது எனக்கு தெரியவில்லை பொறுத்திருந்து பார்க்கலாம்” என பேசி உள்ளார்.

தற்போது இதைக் கேட்ட ஆஸ்திரேலிய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று நடந்த போட்டியில் தான் சதம் அடித்து ஆஸ்திரேலியாவிற்கு வெற்றியை தேடி தந்தார் ஸ்மித். ஆனால் இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன் என கூறியதும் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஆஸ்திரேலியா ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Spread the love

Related Posts

பீஸ்ட் படத்தில் நடித்த நடிகரே, படத்தை பங்கமாய் கலாய்த்துள்ளார் | விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு | அப்படி என்ன சொன்னார் ?

பிஸ்ட் படம் குறித்து அந்த படத்தில் நடித்த மலையாள நடிகரே கலாய்த்த சம்பவம் தற்போது விஜய்

டி.ராஜேந்தரை பார்த்து ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின் – கண்களங்கிய டி.ராஜேந்தர்

தீடிர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்தர் வயிற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

நடிகையின் ஆபாச வீடியோ வெளியிட்ட நபரை தட்டி தூக்கிய போலீஸ், வைரலான வீடியோ

முன்னணி தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். சில படங்களில் ஹீரோயினாகவும் பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும்