திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த மாணவனுடன், அதே பள்ளியில் பணிபுரியும் 26 வயதான ஆசிரியை அந்த மாணவனை தஞ்சைக்கு கொண்டு சென்று திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் கிடைத்ததன் பேரில் ஆசிரியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி துறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடந்த ஐந்தாம் தேதி பெற்றோர்களிடம் நான் விளையாட செல்கிறேன் என்று கூறிவிட்டு பல மணி நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பதறியடித்து துறையூர் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர்கள் தெரிவித்தனர். இதனால் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார் மாணவன் காணாமல் போன அந்த நாளிலேயே அந்த பள்ளியில் பணிபுரியும் சர்மிளா என்கிற ஆசிரியையும் மாயமாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் ஷர்மிளா உடன் மாணவன் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய போலீசார் ஷர்மிளாவின் போன் நம்பரை டிரேஸ் செய்தனர் டிரேஸ் செய்ததில் ஆசிரியை வேளாங்கண்ணி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி என இத்தனை இடங்களுக்கு அந்த சிக்னல் மாறிக்கொண்டே வந்தது. கடைசியில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இருப்பதாக காட்டி இருக்கிறது. எடமலைப்பட்டி புதூரில் உள்ள தோழி ஒருவருடைய வீட்டில் தான் ஆசிரியையும் மற்றும் மாணவனும் இருப்பது கடைசியில் போலீசாருக்கு தெரியவந்தது.
அங்கு தஞ்சை பெரிய கோவிலில் மாணவனுக்கும் ஆசிரியைக்கும் திருமணம் நடந்ததாக தெரிகிறது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனை மீட்டனர் மற்றும் அந்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்து மகிலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
