கர்நாடகாவில் கல்லூரி நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்று கிளம்பிய பின்னர் நிகழ்ச்சி நடந்த அரங்கத்தை மாணவர்கள் பசுவின் கோமியத்தை தெளித்து சுத்தம் செய்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஷிமோகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் சினிமா மற்றும் சமூகம் குறித்த உரையாடல் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்றார். ஆனால் கல்லூரிக்குள் தனியார் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றன.
இதனால் கோபமடைந்த மாணவர்கள் நிகழ்ச்சி நடந்த அரங்கத்தில் பசுவின் கோமியத்தை தெளித்து சுத்தம் செய்தனர்.
