“சென்னை அணி தோல்விக்கு முக்கிய காரணம் தோனி தான்” என சரமாரியாக விளாசியுள்ளார் சுனில் கவாஸ்கர்

ஐபிஎல் விளையாட்டில் சென்னை அணி நேற்று பஞ்சாபிடம் தோற்று ஹாட்ரிக் தோல்வியை முதல் முறையாக ஐபிஎலில் பதிவு செய்தது. இதற்கு முன்னர் கேகேஆர் அணியிடமும் மற்றும் லக்னோ அணியிடமும் தோற்றனர். இப்போது பஞ்சாப் அணியிடம் தோற்று ஹாட்ரிக் லாஸ் என்ற ஒரு மோசமான ரெக்கார்டு சென்னை அணி படைத்துள்ளது.

இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் “டோனி எப்போதுமே பவுண்டரிகளை அடிக்கவில்லை என்றாலும் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் அவ்வப்போது எடுத்துக் கொண்டே இருப்பார். அதனால் ரன்களும் சற்று உயரும். ஆனால் இந்த போட்டியில் அவர் அதை கூட செய்யவில்லை, பவுண்டரிகளையும் தாமதமாகத்தான் அடித்தார். ஒருமுனையில் ஷிவம் டுபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது மறுமுனையில் இவர் ரன்கள் அடிக்க தவறியதால் அவருக்கு சரியான ஒரு பார்ட்னர் அமையவில்லை, இந்த தோல்விக்கு முக்கிய காரணம் தோனி தான்” என்று கூறியுள்ளார். சுனில் கவாஸ்கர் இப்படி கூறியது டோனி ரசிகர்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏப்ரல் 9ஆம் தேதி ஹைதராபாத் அணியுடன் விளையாடும் சென்னை அணி, எப்படியாவது தனது நான்காவது ஆட்டத்தில் முதல் வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும். அதனால் ரவீந்திர ஜடேஜாவுக்கு முதல் வெற்றி ஹைதராபாத் அணியிடம் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஹைதராபாத் அணி இன்று லக்னோ அணியிடம் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

Viral Video | கணக்கில் வகுத்தலை சரியாக செய்ய தெரியாமல் தலையை சொரிந்த தலைமை ஆசிரியரை பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளார் ஆட்சியர்

கணக்கில் வகுத்தலை சரியாக செய்ய தெரியாமல் தலையை சொரிந்த தலைமை ஆசிரியரை பொறுப்பில் இருந்து நீக்கி

உன் தலைவன் ஸ்டாலின் பத்தி பேசுனா அடிப்பியா ? எங்க அடி பாக்கலாம், செருப்பு பிஞ்சிரும்… சவுக்கு ஷங்கர் அதிரடி

திமுகவில் ஐடி விங் செகரட்டரி ஆக இருக்கும் டிஆர்பி ராஜா ஸ்டாலினைப் பற்றி விமர்சித்தால் மிதிப்போம்