குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சுனிதாவிடம் நெட்டிசன் ஒருவர் கேட்ட ஒரு மோசமான கேள்விக்கு தற்போது தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த குக் வித் கோமாளி ஷோவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு எப்போதும் உண்டு.
ஏனென்றால் அதில் வரும் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க ஊக்குவிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் தான் புகழ் மற்றும் அஸ்வின் அவர்கள் இருவரும் தற்போது சினிமாவில் பிஸியாக இருந்து வருகின்றனர். அந்த அளவிற்கு சினிமாவிற்கு செல்ல இந்த ஷோ அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளது.
அதேபோல இதர கோமாளிகளான பாலா, சுனிதா, சிவாங்கி, மணிமேகலை ஆகியோரும் சினிமா துறையில் அவ்வப்போது பிஸியாக இருந்து வருகின்றனர். இதில் விஜய் டிவியில் சுனிதா டான்ஸர் ஆக வலம் வருகிறார். நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு குக் வித் கோமாளியில் கோமாளியாக அறிமுகமானார். குழந்தை போல பேசும் தமிழால் ரசிகர்களை பெற்றெடுத்தார். கடந்த மூன்று சீசன்களாக முக்கியமான கோமாளியாக இவர் வலம் வருகிறார்.
மீண்டும் தாத்தாவாக போகும் ரஜினி | மகிழ்ச்சி செய்தி சொன்ன மகள்

இவருக்கு என்று சமூக வலைதளங்களில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவருக்கென்று ஒரு பேன் பேஜும் இன்ஸ்டாவில் நிறைய இருக்கிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் மற்றும் உரையாடும் பழக்கம் கொண்டவர் இவர். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்கள் உடன் உரையாடும்போது நெடிசன் ஒருவர் பிக்கினியை திறந்து காட்டுமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுனிதா. அந்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்தார். மேலும் அப்படி பேசியவரை வெட்ட வெளியில் அம்பலப்படுத்தி நெத்தியடி அடித்துள்ளார்.
