சன்னி லியோனை பார்க்க திருப்பதியில் கூடிய கூட்டத்தின் வீடியோவை சன்னி லியோன் அவர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் தான் சன்னி லியோன். இவர் பெயரை சொன்னாலே அடையாளம் காணாத ஆட்களே இல்லை என்று தான் சொல்லவேண்டும். அடல்ட் கன்டென்ட் என்று சொன்னாலே சன்னி லியோன் பெயர்தான் முதலில் எல்லோருக்கும் நியாபகம் வரும் அந்த அளவிற்கு பிரபலமானவர் தான் இவர். என்னதான் A படங்களில் நடித்து பிரபலமானவர் என்றாலும். தன்னுடைய முடிந்துபோன வாழ்க்கையை மறைக்கவும், மறக்கவும் முயற்சிக்கிறார்.
இவர் தற்போது சமூக பணிகளில் ஈடுபட்டு அதை செய்து வருகிறார். குழந்தை தத்தெடுப்பு, சமுதாயப் பணிகள் என இவரின் செயல்கள் சமூகத்தில் இவருக்கு நல்ல மதிப்பை தருகிறது. அவரே இதைப்பற்றி ஒரு நேர்காணலில் “ஆம்… நான் என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் சில காரியங்களை செய்திருக்கிறேன். அதிலிருந்து மீள இப்போது எனக்கு உதவியாக இருங்கள்” என அவர் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கைக்கு பாலமாக ரசிகர்களும் அவருக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர். தற்போது சன்னி லியோன் தன்னை ஒரு வழக்கமான நடிகையாகவே அடையாளப்படுத்த முயற்சிக்கிறார். பாலிவுட் பக்கமும் அவ்வப்போது தலையை காட்டினார்.
இவர் திருப்பதியில் உள்ள மோகன்பாபு பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சன்னிலியோனை கண்ட மாணவர்கள் அவரை பார்த்த உடன் கத்தி ஆரவாரம் போட்டு கூச்சலிட்டனர். இதை பார்த்து தனக்கு இத்தனை பேர் ரசிகர்களா என்று மிகவும் வியந்தார் சன்னி லியோன். அதேபோல் ரசிகர் ஒருவர் சன்னி லியோனின் பெயரை கையில் பச்சை குத்தி உள்ளார். அதையும் அவர் வீடியோ எடுத்து அவரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் “நீங்கள் என்னை என்றென்றும் நேசிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் ஏனென்றால் இப்போது உங்களுக்கு வேறு வழி இல்லை விரைவில் உங்களுக்கு மனைவி கிடைக்க வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார் அந்த வீடியோவும் தற்போது செம வைரலாக பரவி வருகிறது.