ஆபாச படங்களில் நடித்தன் மூலம் பிரபலமான நடிகை தான் சன்னிலியோன். இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களை போடுவது வீடியோக்களை போடுவது என ரசிகர்களை கவர்ந்திழுத்து வந்தார்.

இவர் தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து அசத்தி வருபவர். மேலும் அவருடைய கடந்த கால வாழ்க்கை குறித்து மிகவும் தற்போது வருத்தப்பட்டு பலமுறை புலம்பி இருக்கிறார். தற்போது தொடர்ந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார். இவர் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பதால் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். தற்போது கூட ரசிகர் ஒருவர் சன்னிலியோன் பெயரை டாட்டூவாக குத்திக் கொண்டதை கூட நெகிழ்ந்து வீடியோவாக பதிவிட்டிருந்தார்.
Watch Video | சட்டை பட்டனை கழட்டி தாறுமாறாக வீடியோ பதிவிட்ட நடிகை ராஷ்மிகா | வீடியோ உள்ளே

தற்போது தமிழில் சீரோ ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்து வரும் சன்னிலியோன் திடீரென கடும் விரக்தியில் இருப்பதாக கூறி ஒரு போஸ்ட் வெளியிட்டுள்ளார். அதில் மரம் ஒன்றை வெட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது சீரோ படம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில் நீங்கள் விரக்தியில் இருக்கும் போது இதுபோன்ற கடினமான வேலையை செய்யுங்கள் நன்றாக இருக்கும் என்ற பாணியில் அந்த கருத்தை போட்டு இருக்கிறார். இந்த வீடியோவும் தற்போது வைரல் அடித்து வருகிறது.