மும்பை பங்குச் சந்தையில் சன்டிவியின் பங்குகள் மதிப்பு கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. அதாவது பங்கு மதிப்பு 1.5 சதவீதம் சரிந்து ரூபாய் 402.55 காசுகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் சன்டிவியின் பங்குகள் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது 2022-23 கால ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தின் முடிவுகள் வந்த பின் சன் டிவி பங்குகள் அகல பாதாளத்திற்கு சென்றுள்ளது.

சன்டிவி இந்தியாவிலேயே ஒரு மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம். இந்த நிறுவனம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளில் இயங்கி வருகிறது. மேலும் சன் நெட்வொர்க் வானொலியும் இருக்கிறது. இது தவிர ஐபிஎல் டி20 தீமையும் நடத்தி வருகின்றனர். மேலும் சன் நெக்ஸ்ட் என்கிற டிஜிட்டல் OTT தளமும் இவர்களுக்கு பிரத்தியேகமாக இருக்கிறது.
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை கிடைத்த தொகையில் 50 சதவீதத்தை மற்ற அணிகளுக்கு பிசிசிஐ பிரித்து வழங்க உள்ளது. அப்போது சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான சன் டிவி நெட்வொர்க்கிர்க்கு கணிசமான பங்கு தொகையை பிசிசிஐ நிச்சயம் வழங்கும். பங்குச்சந்தைகள் கடந்த ஆறு மாதங்களாக சன் டிவி நெட்வொர்க் பங்குகள் சரிவு தான் உள்ளது. கடந்த 6 மாதத்தில் பங்கு மதிப்பு 18 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 24 சதவீதம் பங்கு மதிப்பு சரிந்தது குறிப்பிடவேண்டிய விஷயமாகும்.
