விக்னேஷ் சிவன் பத்திரிக்கையாளர் சந்தித்த போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அங்கு பத்திரிக்கையாளர்களை தாக்கியதால் பரபரப்பு புகார் ஒன்று தற்போது எழுந்துள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவருக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. அந்த தகவலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேற்று விக்னேஸ்வரன் வெளியிட்டார். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்ததும் தனியார் பத்திரிக்கை நிறுவனத்தை சேர்ந்த ஆனந்தன் என்கிற நபர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் போட்டோ எடுக்க முயன்றுள்ளார்.
நயன்தாரா திருமணத்திற்கு பிரபு தேவா, சிம்பு அழைப்பு ?

அப்போது இதை பார்த்த மேலாளர் சுரேஷ் சந்திரா நீ யார் என கேட்டதுடன் மிரட்டல் தொனியில் பேசி உள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அந்த பத்திரிக்கையாளர் நீ யார் என்று சுரேஷ் சந்திராவிடம் கேட்டதும் இவர்களுக்குள் மோதல் நிலவியது. அதன் பிறகு மன்னிப்பு கேட்க வந்த ஆனந்தனை சுரேஷ் சந்திராவின் உதவியாளர்கள் தாக்கியதுடன் அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ள முற்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆனந்தன் அண்ணாசாலை காவல்துறையில் இதுகுறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்போது சுரேஷ் சந்திரா தன்னிடம் அவதூறாக பேசியதாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்திலிருந்து அவரது உதவியாளர்கள் என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய தாகவும் கூறியுள்ளார் ஆனந்தன். மேலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.
