பாஜகவில் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண்னிடம் தகாத வார்த்தைகளில் பேசிய திருச்சி சிவா வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பகிர் கிளப்பியது
இந்த வீடியோவை பார்க்க நேரிட்ட பாஜகவின் தலைமையில் இருந்து எந்த விதமான பொது நிகழ்ச்சிகளிலும் திருச்சி சிவா கலந்து கொள்ள வேண்டாம் என பகிரங்கமாக அறிக்கையையம் வெளியிட்டது
இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இருவரும் கூட்டாக இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கின்றனர். அப்போது அவர்கள் பேசுகையில் இந்த பிரச்சனையை எங்களுக்கு இடையில் பரஸ்பரமாக பேசிக்கொண்டு முடித்து விட்டோம்.

எழுத்துப்பூர்வமாக கட்சி தலைமையிடம் இதுகுறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். இதனால் இந்த விஷயத்தை யாரும் பெரிது படுத்த வேண்டாம் என கூறி நாங்கள் அக்கா தம்பியாகவே எங்கள் உறவை சமூகமாக தொடங்க விரும்புகிறோம் எனக் கூறியுள்ளனர். இவர்கள் இருவருக்குமான அந்த வாக்குவாத ஆடியோ வைரலா நிலையில் இருவரும் பரஸ்பரமாக சென்று கொள்ள இந்த செய்தியாளர் சந்திப்பில் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.
அப்படி பச்சை பச்சையாக திட்டிக்கொண்டு இப்போது ஒன்றாக சேர்ந்து பேட்டி அளிக்கும் இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
