ஒடிசா மாநிலத்தில் ஒரு பெண் தனது பாய் பிரண்டிடம் சண்டை போட்டு நடு ரோட்டிலேயே அவனை அடிக்கும் ஒரு காட்சியை ஸ்விக்கி ஃபுட் டெலிவரி பாய் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

அதைக் கண்ட அந்த பெண் அந்த செயல் பிடிக்காததால் அவரிடம் ஏன் வீடியோ எடுக்கிறாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் போல தெரிகிறது. அப்போது முதலில் நிதானமாக பேசிய அந்த டெலிவரி பாய் பின்னர் அந்தப் பெண் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியதால் திடீரென்று அவரை அடிக்க தொடங்கி விட்டார்.

இதை பார்த்த அந்த சாலையோரம் வந்த சில வாகனஓட்டிகள் அவர்களை தடுக்க முயற்சி செய்தனர். இருந்தும் அவர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். கடைசியாக இருவரையும் சமாதானம் செய்து அந்த சண்டையை நிறுத்தி வைத்தனர். பிறகு இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
Girl direct volley of expletives, beat up Boyfriend in full public glare outside #IG Park in #Bhubaneswar pic.twitter.com/7ZVUrfz7Wd
— Mohammad Suffian (@iamsuffian) March 31, 2022