Latest News

Viral Video | அடுக்கு தமிழில் வசனம் பேசி தான் அமெரிக்காவில் நலமுடன் உள்ளதை பதிவு செய்த நடிகர் டி ராஜேந்தர்

நடிகர்கள் நெப்போலியன் மற்றும் பாண்டியராஜ் ஆகியோர்கள் டி ராஜேந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது அடுக்கு முறை தமிழில் ஜம்முன்னு கம்பீரமாக வசனம் பேசி தான் நலமுடன் இருப்பதாக தெரியப்படுத்தியுள்ளார் டி ராஜேந்தர்.

தமிழ் திரையுலகில் பன்முகத் திறமை கொண்ட ஒரு கலைஞராக வலம் வந்தவர் தான் டி ராஜேந்தர். கதை திரைக்கதை இயக்கம் வசனம் பாடல்கள் இசை என எல்லா துறைகளிலும் புகுந்து விளையாடியவர் டி ராஜேந்தர். இவர் எடுத்த படங்கள் அனைத்துமே குடும்ப ரசிகர்களை மிகவும் ஈர்க்கும் வகையில் இருக்கும். மேலும் இவரது மகனான சிம்புவை முதன் முதலில் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இவர்தான். சிறுவயதிலிருந்தே சிம்பு நடிக்க தொடங்கினார்.

பாஜகவில் இணையப்போகும் OPS மகன் | முக்கியமான விவரத்தை வெளியிட்ட சவுக்கு ஷங்கர் | பீதியில் இருக்கும் அதிமுக

தற்போது இவருக்கு உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். ஆனால் சென்னையில் உள்ள மருத்துவர்கள் இவரை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல கூறியிருக்கின்றனர். அதனால் அப்பாவை வெளிநாட்டிற்கு கொண்டு செல்லலாம் என தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டார் டி ராஜேந்தர்.

கடந்து சில தினங்களாக அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார் டி ராஜேந்தர் தற்போது அங்கு அறுவை சிகிச்சை முடிந்து அவர் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. மேலும் கடந்து சில தினங்களுக்கு முன்பு சிம்பு தனது தந்தையுடன் எடுத்துக் கொண்டு புகைப்படமும் வைரலாக பரவியது.

திராவிட மாடல் ஆட்சியில் மாட்டுக்கறி சாப்பிட தடையா ? | சென்னை போலீஸ் போட்ட பதிவால் சர்ச்சை

தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கும் தமிழ் நடிகர் நெப்போலியன் டி ராஜேந்திரனை சந்திக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார் கூடவே இயக்குனர் மற்றும் காமெடி நடிகரான பாண்டியராஜனும் சென்றிருக்கிறார். தனது நண்பர்களை பார்த்து மகிழ்ச்சியில் உற்சாகமடைந்த டி ஆர் அடுக்கு தமிழில் வசனம் பேசி தான் நலமுடன் இருப்பதை தெரியப்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Spread the love

Related Posts

திமுகவின் B – டீமா விஜய் மக்கள் இயக்கம் ?? பிரசாந்த் கிஷோருடன் ரகசிய சந்திப்பு | வெளிவந்த அதிரடி ரிப்போர்ட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தான் விஜய் இவர் ஐபேக் நிறுவனர் மற்றும் பிரபல அரசியல்

பொது செயலாளர் பதவி வேண்டாம் … கட்சியில் தனக்காக ஒரு உயர்ந்த பதவியை உருவாக்கி அதில் அமர திட்டம் போட்ட EPS

கட்சியில் தாம் நிரந்தரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக ஒரு புதிய மாஸ்டர் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்

கோவில் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பதறவைக்கும் வீடியோ காட்சிகள்.! 5 லட்சம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

தருமபுரி தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ருபாய் அறிவிக்கப்பட்டுள்ளது தருமபுரி கோவில்

Latest News

Big Stories