“மதவாதத்தை ஊக்குவிக்காதீர்கள்” – இந்தியாவுக்கு அறிவுரை கூறிய தலிபான் அரசு

மதவெறியை ஊக்குவிக்க வேண்டாம் என இந்திய அரசுக்கு தாலிபான் அரசு அறிவுரை கூறி இருக்கிறது.

கடந்த வாரம் கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான முறையில் பேசியுள்ளார். தொடர்ந்து மற்றொரு பாஜக பிரமுகர் நவீன் ஜிண்டால் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான ஒரு பதிவை பதிவிட்டார்.

“சிங்கம் அண்ணாமலை” என டைட்டில் கார்டுடன் புல்லட் வண்டியில் மாஸாக வரும் அண்ணாமலை நடித்திருக்கும் படத்தின் டீஸர் வெளிவந்தது |

பின்னர் அந்த பதிவை நீக்கி விட்டார். இந்த விஷயங்களை கண்டித்து கான்பூரில் போராட்டம் நடந்தது அந்த போராட்டம் கடுமையானது எனவும் இது தொடர்பாக 40-க்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் கான்பூரில் அந்த பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில் நூபுர் சர்மா பேசிய அந்த சர்ச்சை கருத்துக்கு ஐசிசி நாடுகள் கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா, ஈரான், ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசிய, மாலத்தீவுகள், ஜோர்டான், லிபியா என 15 நாட்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

அதனடிப்படையில் ஆப்கானிஸ்தானில் தற்போது ஆளும் தாலிபான் அரசு செய்தி தொடர்பாளர் ஹபிபுல்லா முஜாஹித் தனது ட்விட்டர் பக்கத்தில் “முகமது நபியை அவமதிக்கும் படி இந்தியாவின் ஆளும் கட்சி பிரமுகர் பேசியுள்ளார். இஸ்லாமியர்கள் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றனர். இதுபோன்ற மத வெறியர்களை ஏன் ஊக்குவிக்கீறிர்கள் என்று நாங்கள் இந்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். இஸ்லாம் புனித மதத்தை அவமதித்து முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் அதில் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபான் ஆட்சியில் பெண்கள் கல்விக்கு செல்லக் கூடாது என தடை விதித்துள்ளனர். பெண்கள் ஆண் துணையின்றி வெளியில் வரக்கூடாது எனக் கட்டளையிட்டு இருக்கின்றனர். மேலும் அப்படியே வெளியே வந்தாலும் முழுவதுமாக உடலை மறைத்து நீல நிற புர்கா ஆடையில் வரவேண்டும் எனவும் கூறியிருக்கின்றனர். ஆண்கள் தாடியை சவரம் செய்ய வேண்டும். சினிமா, கேளிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று பல கட்டளைகளை ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கடைபிடிக்கின்றனர். இப்படி ஒரு நாடு இந்தியாவிற்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு நாம் இறங்கி விட்டோமா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தாலிபான் ஆட்சியின் சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

Viral Video | இந்திய மாணவர்களை தாக்கும் உக்ரைன் ராணுவம் | இந்தியர்களை காப்பாற்ற மத்திய அமைச்சர்கள் உக்ரைன் பயணம்

உக்ரைன் நாட்டில் கடந்த 5 நாட்களாக ரஷ்யப் படைகள் தாக்கி வருகின்றன. இதனால் அங்கு இருக்கும்

கமல் ஹாசனின் விக்ரம் படம் வெளியிட தடை | சென்னை உயர்நிதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நடிகர் கமல் ஹசன் நடித்த விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம்

எதற்காக இந்திய அணியில் கேப்டன்கள் மாறிக்கொண்டே வருகின்றனர் ? | கங்குலி அளித்த விளக்கம்

இந்திய அணியில் கேப்டன்கள் மாதம் ஒருமுறை மாறி வருகின்றனர். கடந்த நாலு மாதங்களில் மட்டும் இந்தியாவில்

x