சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு தந்தையாக நடித்த பிரபல நடிகர் பூ ராம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு நேரில் மரியாதை செலுத்தியிருக்கிறார் உதயநிதி.
இவர் பூ படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, அதற்காக அதன் பின்னர் இவரின் பெயருக்கு முன்னே பூ என்ற எழுத்தை சேர்த்து பூ ராம் என்று அழைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான நீர்பறவை படத்தில் விஷ்ணுவுக்கு தந்தையாக நடித்து அசத்தி இருந்தார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படத்தில் ஒரு காலேஜ் புரபசர் ஆக வரும் ஒரு காட்சியில் ஒரு டயலாக் பேசி மிகவும் பிரபலம் அடைந்தார்.
மேலும் அந்த டயலாக் சமூக வலைதளங்களில் அப்போது மிகவும் வைரலானது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் அவருக்கு தந்தையாக நடித்து ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்படி தமிழ் சினிமாவில் முக்கிய படங்களில் நடித்து பெயர் வாங்கிய நாடகக் கலைஞரான இவர் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்து இருக்கிறார். அதனால் இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் இவரின் உடல் நலம் பெற்று பழையபடி வரவேண்டுமென திரைப்பிரபலங்கள் பல பேர் வேண்டி இருந்தனர் ஆனால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறவில்லை.

இந்த நிலையில் நடிகரும் மற்றும் முதலமைச்சரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அவரை அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று அவரின் மறைவுக்கு வருந்தினார். அந்த போட்டோவை ட்விட்டரில் பதிவு செய்து அவர் கூறியதாவது :- “தேர்ந்த நடிப்பாலும், சிறந்த கதாபாத்திர தேர்வாலும் முக்கியமான படங்களில் பணியாற்றி பாராட்டை பெற்ற குணச்சித்திர நடிகர் அண்ணன் ‘பூ’ராமு அவர்களின் மறைவு கலையுலகிற்குப் பேரிழப்பு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அண்ணனின் உடலுக்கு மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.” இப்படியாக அவர் கூறினார். மேலும் இவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பாக மாறி இருக்கிறது.
