கேஜிஎப் திரைப்படம் வெளியானதிலிருந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது ஒரு பெரிய தமிழ் ஹீரோ படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்குமோ அந்த மாதிரியான வரவேற்பை கே ஜி எஃப் படம் பெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் வெளியான பீஸ்ட் படத்திற்கு டப் கொடுக்கும் வகையில் தியேட்டர்களை குவித்து வருகிறது. கூடவே வசூலையும் குவித்து வருகிறது இந்த கன்னட திரைப்படம்.
இதனால் வருத்தமடைந்த சில தமிழ் சினிமா பற்றாளர்கள் “என்ன பெரிய கேஜிஎப் தமிழ்நாட்டில் இல்லாத படங்களா ? ஏன் ஒரு கன்னட படத்திற்கு இப்படி ஆதரிக்கிறீர்கள் என்று பொறாமையில் பேசி வருகின்றனர். அப்படி பேசி இப்போது ரசிகர்கள் மத்தியில் வாங்கி கட்டிக் கொண்டிருப்பவர்கள் CV குமார். இவர் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும், இறைவி உட்பட பல தமிழ் திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் மாயவன் என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார். இப்படிப்பட்ட இவர் அவரின் டுவிட்டர் பக்கத்தில் கே ஜி எஃப் படத்தை பற்றி நெகட்டிவ் ஆக பேசி தமிழ் படத்திற்கு ஆதரவு தாருங்கள் என்று மறைமுகமாக கூறியுள்ளார். அவர் அதில் குறிப்பிட்டு இருப்பது என்னவென்றால்.

“ஓரு முள்ளும் மலரும் , கல்யாண பரிசு காதலிக்கநேரமில்லை , recently ஆடுகளம் , சூதுகவ்வும் , முண்டாசுபட்டி சதுரங்கவேட்டை , ஜிகர்தண்டா , இன்று நேற்று நாளை , மெட்ராஸ் , ககபோ,தீரன் அதிகாரம் ஒன்று , இறுதிசுற்று , வடசென்னை , ராட்சாசன் , அசுரன் , பரியேறும் பெருமாள் , கைதி சார்பேட்டா பரம்பரை , ஜெய்பீம் , டாணாக்காரன் இதெல்லாத்தையும் விட இந்த mass masala கோலார் தங்க வயல் தான் best of best ணா தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா . தயவு செய்து விட்ருங்கப்பா என்று பதிவிட்டு இருந்தார்.
மேலும் பேசிய அவர் “கேஜிஎப் ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் அவ்ளோ தான் அதனால அந்த படத்தை இங்குள்ள இயக்குனர்கள் எடுக்கும் படத்துடன் அதை ஒப்பிடாதீர்கள்” என்று பொறாமையில் பொங்கி அந்த டீவீட்டை போட்டிருக்கிறார் என அவருக்கு ரிப்ளை வருகிறது.
