சினிமா தயாரிப்பாளர் காலமானார்

அன்பே சிவம், பகவதி, புதுப்பேட்டை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த முரளிதரன் மாரடைப்பால் காலமானார்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா ஆகியோரை வைத்து பல படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன். இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரரான இவர், வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். குறிப்பாக, ‘அன்பே சிவம்’, ‘வீரம் வெளஞ்ச மண்ணு’, ‘மிஸ்டர்.மெட்ராஸ்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘அரண்மனை காவலன்’, ‘வேலுச்சாமி’, ‘ப்ரியமுடன்’, ‘பகவதி’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘உன்னை நினைத்து’ உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். பல படங்களை விநியோகமும் செய்திருக்கும் இவர் இறுதியாக கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் ‘சகலகலா வல்லவன்’ படத்தை தயாரித்திருந்தார்.

அண்மைக்காலமாக படங்களை தயாரிக்காமல் ஒதுங்கியிருந்தார் முரளிதரன். இந்நிலையில், கும்பகோணத்தில் வசித்து வந்தவர், மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மறைந்த கே.முரளிதரன் தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

ஸ்டாலின் ஓராண்டு ஆட்சி காலத்தை குறை கூறிய சீமான் | சீமானை வெச்சி செய்த செந்தில் பாலாஜி | என செய்தார் தெரியுமா ?

திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 7 ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவு பெற்று இருக்கும் நிலையில்

முன்னழகு முண்டியடிக்க கவர்ச்சி படங்களை பதிவேற்றிய நடிகை சஞ்சனா சிங் | மேலும் படங்கள் உள்ளே

பாண்டிச்சேரியில் பப் ஒன்று ஓபன் செய்து வைத்து நடிகை சஞ்சனா கையில் சரக்கு பாட்டிலுடன் கவர்ச்சியான

20 பேய்களுடன் உடலுறுவு வைத்து கர்ப்பமான பெண் ? | அந்த பெண்ணே தன் வாயால் கூறிய வாக்குமூலம் | எப்படி சாத்தியம் ?

ஒரு பெண் பேயுடன் கலவி இன்பம் கொண்டு வருவதாகவும் எனக்கான வாழ்க்கைத்துணை ஒரு பேய் ஆகத்தான்