நடிகர் விஜய் நடித்த ஏப்ரல் 13ம் தேதி வெளிவரவுள்ள பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாமிய சமுதாய மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பீஸ்ட் படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது அதில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக தேசத்துரோகிகள் போலவும் சித்தரித்து காட்டப்பட்டு இருக்கிறது. இந்த காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிடுங்கள் என்று இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த முஸ்லிம் லீக் தலைவர் பி எம்எஸ் முஸ்தப்பா கூறியுள்ளார்.
தற்போது ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த நேரத்தில் இப்படிப்பட்ட காட்சிகளை வைத்து படம் வெளியானால் அது இஸ்லாமியர்களிடையே எரிச்சலை உண்டு பண்ணும் என்றும் அதனால் இந்தக் காட்சிகளை நீக்கிவிட்டு இந்த படத்தை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
