சென்னையில் ரோஸ் மில்க் குடித்ததால் சிறுவன் உயிரிழப்பு | உண்மை காரணம் என்ன என போலீசார் விசாரணை

சென்னையில் சிறுவன் ஒருவனுக்கு ரோஸ்மில்க் குடித்ததால் மயக்கம் ஏற்பட்டு இறந்து போன சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் மளிகை கடை ஒன்றில் ரோஸ்மில்க் குடித்துவிட்டு ரோட்டில் தள்ளாடியபடி நடந்து வந்த சிறுவன் வீட்டிற்கு வந்ததும் மயக்கம் போட்டு கீழே விழுந்தான். உடனே தாய் அலறி துடித்து தனது மகனை என்ன ஆச்சு என கேட்டார் அவர் ரோஸ்மில்க் வாங்கி குடித்ததில் இருந்து எனக்கு இப்படி வாந்தி மயக்கம் ஏற்படுகிறது என தெரிவித்தார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்சில் அந்த பையனை ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மருத்துவமனையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவல் அளித்தனர். அந்த சிறுவன் பெயர் வசந்த் குமார் இவர் சென்னை கண்ணகி நகர் ஓக்கியம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அந்த பகுதியிலேயே ஒரு அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் அங்கு விவரம் தெரிந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த சிறுவன் வசந்தகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்டாலினை சந்திக்க மறுத்த சிம்பு – டி.ராஜேந்தரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய தளபதி ஸ்டாலின் – சிம்பு ஏன் சந்திக்க மறுத்தார் தெரியுமா ?

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். சிறுவன் உண்மையிலேயே ரோஸ்மில்க் குடித்தால்தான் உயிர் இறந்தாரா. ? அல்லது வலிப்பு ஏதும் ஏற்பட்டு உயிரிழந்தாரா என்பது குறித்து பிரேத பரிசோதனையில் தான் தெளிவாகத் தெரியும் என தெரிவித்திருந்தார். மேலும் ரோஸ் மில்க் மாதிரியும் சேகரிக்கப்பட்டு அதையும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரோஸ்மில்க் குடித்ததால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox