“ஹிந்துவாக  இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்….” – ஆ ராசா சர்ச்சை பேச்சு | பாஜகவினர் பதிலடி

முன்னாள் அமைச்சர் மற்றும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா “இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என இந்து மதத்தை கேவலமாக பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். பாஜகவின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அவர்கள் இதற்க்கு கேள்வி எழுப்பியுள்ளார், அதாவது அவர் ட்விட்டர் பக்கத்தில்

:- ‘ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள், என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது’ என்று தி மு க வின் துணை பொது செயலாளர் அ.ராசா பேசுகின்ற ஒரு காட்சியை பார்க்க நேர்ந்தது.

மஹாலக்ஷ்மி இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா ?

இதை எப்போது பேசியிருந்தாலும் வன்மத்தை தூண்டுகிற மத துவேஷ பேச்சே. “எங்கள் கட்சியில் இருப்பவர்கள் 90 விழுக்காடு ஹிந்துக்கள் தான், அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஹிந்து மதத்தின் மீதும் கடவுளின் மீதும் நம்பிக்கை உள்ளது”என்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் நேரத்தில் தி மு க தலைவர் திரு.மு.க,ஸ்டாலின் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

தி மு க தொண்டர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் குறிப்பாக, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட பலரும் கடவுள் மீதும் ஹிந்து மதத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளதோடு தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று வழிபடுவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

மு க ஸ்டாலின் அவர்களுக்கு நம் ஒரே கேள்வி – அ.ராசாவின் கேள்விகள் பொதுமக்களுக்கானது என்றால், மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது மத துவேஷத்தை யார் செய்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அ.ராசாவை கைது செய்து சிறையிலடைக்க உரிய நடவடிக்கை எடுத்து தான் சொன்னதை, தன் கடமையை செய்வாரா? அல்லது

விடுதலை மற்றும் முரசொலியை குறிப்பிட்டு பேசியுள்ளதால், அ.ராசாவின் கேள்விகள் தி மு க தொண்டர்களின் குடும்பத்தினருக்கும், தி மு க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினருக்கும் என்றால், சொந்த கட்சி தொண்டர்களின் குடும்பத்தினர் மற்றும் தலைவரின் குடும்பத்தினரை இழிவுபடுத்தியதற்கு, தி மு கவிலிருந்து நீக்குவாரா? பொது மக்களா? குடும்பமா? எதுவாகினும் உரிய நடவடிக்கை எடுப்பாரா திரு. ஸ்டாலின் அவர்கள்?” என இப்படியாக அவர் பேசியுள்ளார்

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox