“முதலமைச்சருக்கு ரம்ஜான், கிறித்துமஸ்க்கு மட்டும் வாழ்த்து சொல்ல நேரமிருக்கு ஆனா தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல நேரமில்லை” – ஸ்டாலினை சீண்டிய தமிழிசை

காவியும் ஆன்மீகமும் சேர்ந்ததுதான் தமிழகம். அதைப் பிரிக்க முடியாது அதை பிரிக்க சில சக்திகள் செயல்பட்டு வருகின்றன என ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

வேலூரை அடுத்து உள்ள ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் பாலாறு பெருவிழா ஒன்று நடந்து வருகிறது. அதில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் காவிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அன்பு அதிகாரம் வளம் அனைத்தும் இருக்கும். அனைத்து மதங்களையும் அது மதிக்க கற்றுக் கொடுக்கும். ஆன்மீகம் இல்லாமல் தமிழகம் இல்லை. ஆண்டாள் கற்றுக் கொடுத்த தமிழை தான் தற்போது அனைவரும் நாவிலும் தவழ்ந்து வருகிறது.

ஆழ்வார்கள் இல்லாமல் தமிழ் இல்லை. ஆன்மீகமும் காவியமும் எப்போதுமே ஒன்று சேர்ந்தது. அதை பிரிக்க முடியாது. ஆனால் தமிழகத்தில் காவிக்கு சம்பந்தமில்லை என்ற நிலை உருவாகி வருகிறது. அதை சில சக்திகள் தடுக்க நினைக்கின்றனர். கொரோனா காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கோவில் கூட மூடப்படவில்லை. சிறந்த வழிபாட்டோடு நாங்கள் கொரோனாவை கட்டுப்படுத்தி கோவிலும் திறந்து வைத்தோம். இதனை நாங்கள் புதுச்சேரி மாடல் என்று கூட சொல்லலாம். அனைத்து மதத்தினரும் இறைவனை வழிபட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அதை நாங்கள் செய்தோம். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செல்வது வழக்க. இன்னும் சொல்லப்போனால் நடராஜர் இருப்பதால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அஞ்ஞானமும் சொல்கிறது மெய்ஞானமும் சொல்கிறது.

அப்படிப்பட்ட ஒரு நடராஜரை மோசமாக விமர்சிக்க கூடிய ஒருவரை எப்படி உங்களால் சுதந்திரமாக வெளியில் சுற்ற வைக்க முடிகிறது. அனைவருக்கும் மரியாதையும் பரந்த மனப்பான்மையும் தான் எல்லா மதமும் சொல்லிக் கொடுக்கிறது அதற்கு இந்து மதமும் வரிவிலக்கல்ல. சகிக்க முடியாத வார்த்தைகளால் கடவுளை பற்றி பேசுவது அவசியம் இல்லாத ஒன்று. மேலும் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் கிறிஸ்மஸுக்கு வாழ்த்து சொல்லுவார். ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லுவார். ஆனால் தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார். ஏன் என்று கேட்டால் இதுவரை பதில் இல்லை” என்று முதல்வரை மிக கடுமையாக சீண்டியுள்ளார் தமிழிசை.

Spread the love

Related Posts

நடிகை மீனாவின் இரண்டாவது கணவர் இதோ இவர் தானா.. ரகசிய திருமணமா…?

தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் 1982 ஆம்

பச்சை பொய் பழனிசாமி என்று சவால் விட்ட ஸ்டாலின்

ஊரக உள்ளாட்சித்தேர்தல் பணிகள் அனைத்து கட்சி தலைவர்களும் மக்களை சந்தித்து ஓட்டு கேட்பது வழக்கம் ஆனால்

Viral Video | செவ்வாய்கிரகத்திற்கு ராக்கெட் அனுப்ப பஞ்சாங்கம் தான் உதவியாக இருந்தது என கூறிய நடிகர் மாதவனை சங்கி, பூமர் என கலாய்த்து வருகின்றனர்

இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிய களம் பஞ்சாங்கத்தைப் பார்த்து தான் நேரம் அறியப்பட்டது என சர்ச்சைக்குரிய