IPL Auction 2022 | எந்தெந்த தமிழக வீரர்கள் எந்தெந்த அணியில் உள்ளனர் | ஒரு அலசல்

ஐபிஎல் 2022 காண ஏலம் வெற்றிகரமாக நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் பல ஊரை சேர்ந்த வீரர்கள் பல அணிகளில் இடம் பெற்றுள்ளனர், அதில் முக்கியமாக தமிழகத்தை சேர்ந்த சில வீரர்கள் எந்தெந்த ஐபிஎல் அணிக்கு சென்றுள்ளனர் என்பதை பற்றிய விவரங்களை கீழே பார்க்கலாம் :-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசனை எடுத்துள்ளது.

ஹரி நிஷாந்த் :- இவர் இடக்கை தொடக்க ஆட்டக்காரர் மற்றும் ஆப் ஸ்பின் போடக் கூடிய திறமை பெற்றவர்.

ஜெகதீசன் :- இவர் தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். ஏற்கனவே இவர் சென்னை அணியில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. கொல்கத்தா அணியை பற்றி சொல்லவேண்டுமென்றால் இந்த அணி எப்போதும் தமிழக வீரர்களை அதிகம் நம்பி ஏலத்தில் எடுக்கும். முந்தைய சீசனில் கூட தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா அணியை 2018 ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கொண்டு சென்றார். இந்த அணியின் சிஇஓ வெங்கி மைசூர் முதற்கொண்டு கேகேஆர் மேனேஜ்மென்டில் நிறைய தமிழர்கள் இருக்கின்றனர் என்பது தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இந்த அணியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் இருக்கின்றனர்.

வருண் :- மிஸ்டரி (mystery) வகை சுழல் பந்துவீச்சாளர்கள் கிரிக்கெட்டில் அரிதாகவே காணமுடியும் அந்தவகையில் இவரும் ஒரு மிஸ்டரி சுழல்பந்து வீச்சாளர் இவர் கேகேஆர் அணிக்காக கடந்த இரண்டு சீசனிலும் பிரமாதமாக தனது பங்களிப்பினை அளித்தார். மூன்று நான்கு முறை தோனியை போல்ட் எடுத்து ஆட்டமிழக்கச் செய்தார், அப்படிப்பட்ட ஒரு பெருமை இவருக்கு சேரும். தற்போது இவர் இந்த வருடமும் கேகேஆர் அணிக்கு தான் ஆட உள்ளார்.

பாபா இந்திரஜித் :- இவர் பாபா அபராஜித் அவர்களின் சகோதரர் ஆவார். டொமஸ்டிக் ஆட்டங்களில் விளையாடிய காரணத்தால், இவரை கேகேஆர் அணியில் எடுத்துள்ளனர் இவர் ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்.

அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரவி அஸ்வின் அவர்களை எடுத்தது.

ரவி அஸ்வின் :- இவரைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை இவரின் சுழல் பந்து வீச்சு பல முன்னணி பேட்ஸ்மேன்களே ஆட திணறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் – சாய் கிஷோர், விஜய் சங்கர், சாய் சுதர்ஷன்

சாய் கிஷோர் :- இதற்கு முன் இவர் சென்னை அணியில் விளையாடினார் தற்போது இவர் குஜராத் அணிக்காக விளையாட உள்ளார் இவர் ஒரு சுழல் பந்து வீச்சாளர்.

விஜய் சங்கர் :- இவர் இதற்கு முன்பு ஹைதராபாத் அணியில் விளையாடினார் இவர் ஒரு ஆல்ரவுண்டர் தேவையான நேரத்தில் அணிக்கு பேட்டிங் பவுலிங் இரண்டிலும் இவர் தனது பங்களிப்பை தருவார்.

சுதர்சன் :- இவர் இதற்கு முன்பு கேகேஆர் அணிக்காக விளையாடினார் தற்போது இவர் குஜராத் அணிக்காக விளையாட உள்ளார், இவரும் ஒரு சுழல் பந்து வீச்சாளர்.

அடுத்ததாக சன்ரைசர்ஸ் அணி இந்த அணி நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தரை எடுத்தது.

சுந்தர் :- இவர் ஒரு சுழல் பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டர் இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை இவர் இந்திய அணியில் தற்போது முக்கியமான வீரராக வளர்ந்துள்ளார்.

நடராஜன் :- யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் நடராஜன் அவர்கள் இதற்கு முன்பு ஐதராபாத் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் அவரால் முழு சீசனும் விளையாட முடியவில்லை. எனவே அவர் இந்த சீசனில் அவர் பங்களிப்பை தருவார் என்று எண்ணி ஹைதராபாத் அணி அவரை மீண்டும் ஏலத்தில் எடுத்திருக்கிறது.

அடுத்ததாக மும்பை அணி முருகன் அஸ்வினையும் மற்றும் சஞ்சய் யாதவும் எடுத்தது.

முருகன் :- இவர் தமிழகத்தை சேர்ந்த ஒரு சுழல் பந்துவீச்சாளர், இதற்கு முன்பு பஞ்சாப் அணிக்காக விளையாடினார் தற்போது இவர் மும்பை அணிக்காக விளையாட உள்ளார்.

சஞ்சய் :- இவர் இடக்கை பேட்ஸ்மேன் மற்றும் இடக்கை பந்துவீச்சாளர்.

பஞ்சாப் கிங்ஸ் – ஷாரூக்கான்

ஷாரூக்கான் :- இந்த ஐபிஎல் ஏலத்தில் நட்சத்திர தமிழ்நாடு வீரர் என்றால் அது ஷாரூக்கான்தான் இவரை வாங்க பல அணிகள் போட்டி போட்ட நிலையில் கடந்த சீசன் அவரை எடுத்திருந்த பஞ்சாப் அணி மீண்டும் அணியில் எடுத்திருக்கிறது. இவர் மிகவும் அதிரடியாக ஆடக்கூடிய ஒரு தமிழகத்தை சேர்ந்த வீரர் இவர் தற்போது பஞ்சாப் அணிக்கு திரும்பி உள்ளது அந்த அணியின் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தினேஷ் கார்த்திக்கை எடுத்துள்ளது

தினேஷ் கார்த்திக் :- மேலே சொன்னது போல இவர் ஏற்கனவே KKR அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார் தற்போது பெங்களூரு அணிக்கும் கேப்டன் தேவை என்பதால் இவருக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதில் குறிப்பிடப்படாத லக்னோ மற்றும் டெல்லி அணிகளில் எந்த தமிழக வீரர்களும் எடுக்கப்படவில்லை.

Spread the love

Related Posts

தாய்லாந்தில் ஜாலியாக அனிமூன் சென்றுள்ள நயன்தாரா விக்னேஷ் | அது முடிந்ததும் பக்கா பிளான் போட்டிருக்கும் விக்னேஷ்

கோலிவுட் வட்டாரத்தில் புதுமண தம்பதிகளாக வலம் வரும் ஜோடிகள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

“இஸ்லாமியர்களை தீவீரவாதிகளாக சித்தரிக்காதீர்கள்…. ” பீஸ்ட் படத்திற்கு தடை கோரி தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை

நடிகர் விஜய் நடித்த ஏப்ரல் 13ம் தேதி வெளிவரவுள்ள பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கக் கோரி

ஜம்முனு ஹனிமூன் பிளான் போட்ட ரவீந்தர் … தேன்நிலவு எங்கே தெரியுமா ?

சன் டிவி தொகுப்பாளனி மற்றும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி திடீரென திருமணம் செய்து கொண்ட போட்டோவை