சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னாவுக்கு எப்படிப்பட்ட ஒரு ரோல் என்று தற்போது ஒரு அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் இதற்கு முன்னால் சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாதே படம் எதிர்பார்த்த அளவு சரியாக போகாததால் தற்போது ஜெயிலர் படத்தில் நெல்சன் உடன் இணைந்துள்ளார். நெல்சன் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்ததை தொடர்ந்து இந்த படத்தில் எப்படியாவது ஒரு comeback கொடுத்து விட வேண்டும் என துடி துடிப்போடு இருக்கிறார். அதேபோன்று தான் ரஜினியும்.

இரண்டு பேருக்கும் இது முக்கியமான படம் என்பதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் வருவார் என கூறப்பட்டிருந்தது. அதன் பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராயும் நடிக்கிறார் என தகவல் வெளிவந்தது. தற்போது இந்த படத்தின் ஒரு சிறிய அறிவிப்பை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவனால் வாந்தி எடுத்த நயன்தாரா | பயப்படும் படி ஒன்னுமில்லை என கூறிய மருத்துவமனை
அதில் பிரியங்கா மோகனும் சிவகார்த்திகேயனும் படத்தில் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் இந்த படத்தின் இவர்களுடன் சேர்ந்து தமன்னாவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமன்னா இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் ரோல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ரஜினி கூட நடிக்கும் முதல் படத்திலேயே நெகட்டிவ் ரோலா என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் ஒரு சிலர் இவர் பிளாஷ்பேக் ரஜினிக்கு ஜோடியாக வருவார் என்றும் கூறுகின்றனர். எனவே இவர் பிளாஷ்பேக் ரஜினிக்கு ஜோடியாக வருகிறார இல்லை நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வருகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
