வகுப்பறையில் மாணவியின் கையை பிடித்து “ஐ லவ் யூ” என்று சொல்லிய ஆசிரியரை பெற்றோர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே அய்யனேரி கிராமத்தை சேர்ந்தவர் தான் முத்தையா இவருக்கு வயது 43 இவர் கடந்த 6 ஆண்டுகளாக திருநெல்வேலி மாவட்டத்தில் திசையின் விலையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே ஆசிரியர் முத்தையா ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அடிக்கடி தேவையில்லாமல் சில்மிஷம் செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே மாணவிக்கு கணக்கு சொல்லித் தருகிறேன் என்ற பெயரில் அந்த மாணவியின் பக்கத்தில் அமர்வது கையைப் பிடிப்பதாக உல்லாசமாக இருந்துள்ளார். திடீரென்று அவரை பார்த்து கண்ணடித்து “ஐ லவ் யூ” என்று கூறியுள்ளார். அந்த மாணவி அதைப் பார்த்ததும் பதட்டமடைந்த விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு வந்து நடந்த விஷயத்தை பெற்றோர்களிடம் பகிர்ந்துள்ளார். இதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அந்த ஆசிரியரின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். உடனே அருகிலிருந்த கிராமத்து மக்கள் வந்து சமாதானம் செய்து அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் முந்தையவை கைது செய்துள்ளனர்.