வகுப்பறையில் மாணவர் ஒருவர் ஆசிரியைக்கு மசாஜ் செய்து விடும் ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களே மசாஜ் செய்ய வைத்து இருக்கிறார். அந்த வீடியோ வெளியானதை அடுத்து அவரை சஸ்பெண்டும் செய்திருக்கிறது அந்த பள்ளி. பள்ளிகளில் நடக்கும் பிரச்சனைகள் அதிகரித்து வரும் காலத்தில் மாணவர்கள் அதன் மூலம் பலர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் தான் உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

அந்த வீடியோவில் மாணவர் ஒருவர் ஆசிரியருக்கு மசாஜ் செய்து விடுகிறார். அந்த ஆசிரியை சொகுசாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சாய்ந்தபடி இருக்கிறார். அவருக்கு அந்த பள்ளி மாணவர் கையைப் பிடித்து மசாஜ் செய்து விடுகிறார். இந்த செயலின் போது மற்ற மாணவர்களும் வகுப்பறையில் இருப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை வெளியானதை அடுத்து அந்த ஆசிரியர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய வந்த கல்வி அதிகாரி பிபிசிங் அவர்கள் :- “இந்த காணொளியை சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் நான் பார்த்தேன் முதல் பார்வையில் ஆசிரியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார் அவரது இடைநீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறியுள்ளார் என்று இந்தியா டுடே பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
பச்சை டிரவுசரை போட்டு அலப்பறை செய்யும் ஆண்ட்ரியா | மேலும் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே

ஆசிரியர் மீது முறையான புகார் ஏதும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பள்ளி ஆசிரியை பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் விசாரித்த போது நல்ல கருத்துக்களை யாரும் கூறவில்லை. ஏற்கனவே அவர் இது போல தான் நடந்து கொள்வார் எனவும் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலான பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கையை முதல் நடவடிக்கையாகும் எனவும் கூறுகின்றனர்.