“எந்த பெண்ணுக்கு பிரபோஸ் செய்தாலும் பிளாக் செய்கிறார்கள், எனக்கு இந்த ஆப் பிடிக்கவில்லை” – பயனர் ஒருவரின் ஆப் ரிவியூ வைரல்

எந்த பெண்ணுக்கு பிரபோஸ் செய்தாலும் பிளாக் செய்கிறார்கள். எனக்கு இந்த ஆப் பிடிக்கவில்லை என பயனர் ஒருவர் மெசஞ்சர் ஆப்புக்கு ரிவியூ போட்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

சமூக வலைதள உலகில் நாம் கண்டிராத பல வகையான விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். அது ஏற்கும்படியாகவும் இருக்கும், சிலது ஏற்க கூடாத வகையிலும் இருக்கும். அதில் நமக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு நல்ல முறையில் பயன்படுத்தினால் சமூக வலைதளம் என்பது மிகவும் எல்லோருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும். அதில் ஒன்றுதான் பேஸ்புக் கொண்டு வந்த ஒரு மெசேஜை சர்வீஸ் ஆப்.

துபாய் பாலைவனத்தில் ஷேக் உடை அணிந்து சுற்றிவரும் ஜி பி முத்துவின் வீடியோ வைரல்

இந்த மெசேஞ்சர் ஆப்பிள் நமக்கு தேவையானவர்களிடம் இருந்து மெசேஜ் பெறவும் மெசேஜை அனுப்பவும் பயன்படுகிறது. இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும். அந்தந்த ஆப்புகளை பயன்படுத்திவிட்டு அதனுடைய ரிவியூக்களை நாம் கீழே போடலாம். மெசஞ்சர் ஆப்பை பயன்படுத்திவிட்டு ஒரு பயனர் ஒருவர் அதற்கு கீழே கமெண்ட் செய்து இருக்கிறார். அதாவது “இந்த ஆப் மிகவும் மோசமான ஆப், நான் எப்போது ஒரு பெண்ணுக்கு ப்ரபோஸ் செய்ய போனாலும் அவள் என்னை பிளாக் செய்து விடுகிறாள், அதனால் இந்த ஆப் எனக்கு பிடிக்கவில்லை. முதலில் அந்த பிளாக் செய்யும் ஆப்ஷனை இந்த ஆப்பில் இருந்து எடுங்கள்” என பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த கமெண்ட் வைரலாகி வருகிறது.

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox