பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத் வருகை தரும் நிலையில் அவருடனான சந்திப்பை தவிர்க்கும் விதத்தில் பெங்களூருவுக்கு கிளம்பிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தெலுங்கானா முதல்வர் சந்திக்க தவிர்ப்பது இது இரண்டாவது முறையாகும். அது மட்டுமில்லாமல் கடந்த 4 மாதங்களில் இந்த இரண்டு சம்பவங்கள் நடந்திருக்கிறது. தெலுங்கானாவில் ராஷ்டிரிய சமிதி மற்றும் பாஜக இடையே அரசியல் மோதல் இருந்து வருகிறது. அதன் காரணமாக இன்று மதியம் டெல்லியில் இருந்து புறப்பட்டு இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று அவருக்கு சிறப்பு செய்ய தெலுங்கானா முதல்வர் மருத்து தற்போது பெங்களூரு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவர் அங்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினரை சந்தித்து அரசியல் விஷயமாக சில பேச்சுவார்த்தையை நடத்த போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஹைதராபாத்துக்கு வந்த பிரதமரை தெலுங்கானா கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் தான் முன் நின்று வரவேற்றார். அங்கு இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தின் 20வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க மட்டுமல்லாமல் அங்கிருக்கும் முதுநிலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றவும் அவர் வந்திருக்கிறார். மேலும் அவர் அந்த விழாவை முடித்துவிட்டு சென்னை வர உள்ளார்.
இன்று மாலை நேரு விளையாட்டு அரங்கில் 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் இன்று தொடங்கி வைக்கிறார். இதில் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான 5 நிறைவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். 28 ஆயிரத்து 500 கோடி ருபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று இரவே தலைநகர் டெல்லிக்கு கிளம்புகிறார் மோடி.
இது ஒருபுறமிருக்க நான்கு நாட்களுக்கு முன்புதான் தமிழ் நடிகர் தளபதி விஜய் அவர்கள் தெலுங்கானா முதல் அமைச்சரை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக சில வார்த்தைகளை பேசியுள்ளார் என்று விஜய் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் அவர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. மோடி தெலுங்கானா வரும் இந்த நேரத்தில் விஜய் அவர்கள் தெலங்கானா முதல்வரை சந்தித்து பேசியது தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.

விஜயை சந்திக்க மட்டும் தெலங்கானா முதல்வருக்கு நேரம் இருக்கிறது நம் இந்திய பிரதமரை வரவேற்க நேரமில்லையா எனவும் பாஜக பிரமுகர்கள் பலரும் தெலங்கானா முதல்வரை விமர்சித்து வருகின்றனர்.
பிரதமருடன் போலீஸ் தீவிர விசாரணை? சிக்குவாரா பிரதமர்?