ஊருக்கு நடுவில் இருக்கும் ஒரு கிரவுண்டில் அவ்வப்போது டென்னிஸ் பால் டோர்னமெண்ட் வைப்பது நிறைய ஊர்களில் சகஜம். அப்படி பஞ்சாபில், ஜலாலாபாத் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமத்தில் நடந்த ஒரு டென்னிஸ் பால் டோர்னமெண்ட் மூலம் பிரபலமடைந்தவர் தான் கேகேஆர் அணிக்காக இந்த வருடம் களமிறங்கும் 23 வயது மட்டுமே ஆனா ரமேஷ்குமார்.
ரமேஷ் குமாரை கேகேஆர் அணி இந்த வருடம் ஏலத்தில் 20 லட்சத்திற்கு எடுத்தது இவரைப் பற்றி எங்கு தேடினாலும் எந்த ஒரு தகவலும் யாருக்கும் கிடைக்கவில்லை, இவர் உண்மையிலேயே கிரிக்கெட் விளையாடும் நபர் தானா இவரை எதற்காக கேகேஆர் அணி தேர்ந்தெடுத்தது என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியது.
அப்போதுதான் தெரியவந்தாது இவர் பெயர் ரமேஷ்குமார் என்றாலும் இவரை எல்லோரும் செல்லமாக நரேன் ஜலாலாபாத் என்றுதான் அழைப்பார்கள் என்று. நரேன் ஜலாலாபாத் என்று யூட்யூபில் தேடினால் இவரின் வீடியோ ஒன்று தென்படும் என்ற தகவல் பரவலாக பேசப்பட்டது.

அப்படி தேடியதில் இவருடைய ஒரு யூடியூப் வீடியோவில் 10 பாலுக்கு 50 ரன்கள் விளாசிய வீடியோ ஒன்று காண நேர்ந்தது. இப்படி இருந்த ரமேஷ்குமார் ஒரு கட்டத்தில் சென்ற வருடம் கேகேஆர் அணிக்காக ஆடிய குர்கீரத் சிங் மானை காண ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருடன் நட்புறவு மேற்கொண்ட ரமேஷ் குமார் எனக்கு எப்படியாவது பெரிய அளவில் கிரிக்கெட் விளையாட ஒரு வாய்ப்பு வாங்கித் தாருங்கள் என் குடும்பம் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது நீங்கள் ஏதாவது எனக்கு உதவி செய்தால் அது எனக்கு மிகப்பெரிய காணிக்கையாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரும் அதற்கு பதில் அளிக்கும் வகையில் நான் கண்டிப்பாக உனக்கு எந்த வகையில் உதவி வேண்டுமோ செய்வேன் என்னை நம்பு என்று ஆசை வார்த்தைகளைக் கூறி சென்றார். அதற்குப்பிறகு மொகாலியில் நடந்த ஒரு கிரிக்கெட் அகாடமி கேம்ப்க்கு ரமேஷ் குமார் வருகை தந்திருந்தார். அப்போது அவர் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டார் அதாவது மேற்கிந்திய தீவு அணியை சேர்ந்த நரேன் அவர்களின் மிஸ்டரி வகை பந்து வீசு போல 6 பந்துகளில் 5 வகையான வெரைட்டி களை அவர் காண்பித்தார்.

இதை ஒரு வீடியோவாக எடுத்து குர்கீரத் சிங், கேகேஆர் அணியில் ஒரு பயிற்சியாளராக இருக்கும் அபிஷேக் நாயருக்கு அனுப்பினார் அப்போது அதைப் பார்த்து, கேகேஆர் அணிக்காக அவரை டிரெயில்சில் (trails) பங்கேற்குமாறு அபிஷேக் நாயர் அழைத்துள்ளார். அதன்படி அவர் அந்த டிரெயில்சில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்தையும் சோதித்த பிறகு அவரை ஏலத்தில் எடுக்க கேகேஆர் முன்வந்தது.
ஜலாலாபாத் ஊரை சேர்ந்த இந்த ரமேஷ்குமார், சுனில் நரேன் அவர்களின் பந்துவீச்சை போலவே இவருடைய பந்துவீச்சும் இருக்கிறது என்ற காரணத்தினாலே இவரை ஜலாலாபாத் நரேன் என்று அனைவரும் செல்லமாக அழைத்தனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இவர் வளர்ந்துள்ளார். இவரின் அப்பா செருப்பு தைக்கும் தொழிலாளி மற்றும் அம்மா வளையல் விற்கும் தொழிலை செய்து வந்தனர்.
இவரின் வீட்டில் இவரை ஏதாவது வேலைக்கு செல்லும்படி வற்புறுத்தி கொண்டே வந்தனர் ஆனால் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தினால் இவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார். அந்த போட்டிகளில் கிடைத்த பரிசு தொகை பணம் மூலம் தனது மேல் படிப்பை அவர் முடித்தார். அதனால் இந்த ஏலத்தில் வந்த பணம் இவர் குடும்பத்திற்கு நிச்சயம் பயன்படும் என்ற எண்ணத்திலும் கேகேஆர் அணி இவரை எடுத்தது.

இவருக்கு எந்தவித முன்னணி கிரிக்கெட் அனுபவமும் கிடையாது ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசியது என்னவென்றால் “கடவுளின் அருளால் தற்போது இந்த வாய்ப்பு எனக்கு கிடைதிருக்கிறது, எனக்கு எந்தவித பெரிய கிரிக்கெட் அனுபவமும் கிடையாது அனால் கண்டிப்பாக நான் கேகேஆர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு ரஞ்சி டிராபியில் விளையாடுவேன், அதன் மூலம் இந்திய அணிக்கும் நான் விளையாடுவேன், அதுதான் என் இலக்கு, கேகேஆர் அணிக்காகவும் குர்கீரத் சிங் மானுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்றால் கேகேஆர் அணி என்னை இப்போது ஏலத்தில் எடுத்து இருக்காது, எனவே நான் அவருக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

டென்னிஸ் பால் டோர்னமெண்ட் மட்டுமே ஆடி எந்தவித முன்னணி கிரிக்கெட் அனுபவமும் இல்லாத இவரின் திறமையை மேலும் வளர்க்க வேண்டும் என்று எண்ணி தைரியமாக இவரை எடுத்து நெகிழ்ச்சி படுத்திய கேகேஆர் அணியை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.