கூத்தாடி நாய்களை செருப்பால அடிக்கணும்,…. காத்துவாக்குல 2 காதல் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரத்துக்கு முஸ்லிம் பெயரை வைத்து இழிவு படுத்துகின்றனர் என்பதுபோல தேசிய லீக் கட்சியின் தலைவர் ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா சமந்தா விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் நடித்து நாளை மறுநாள் திரைக்கு வர காத்திருக்கும் படம் தான் காத்துவாக்குல இரண்டு காதல் இந்தப் படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு விஜய் சேதுபதியின் எந்த படத்திற்கும் இல்லாத போல அதிகமாக உள்ளது.
“முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்” பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு

எனவே இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் கூடியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். இந்த ட்ரெய்லரில் குறிப்பிட்ட ஒரு காட்சியை பதிவிட்டு இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் :-
இந்த கூத்தாடி நாய்களை செருப்பால் அடிக்கனும் “என்னைய கல்யாணம் பண்ணிட்டான் என நயன்தாரா சொல்ல, உடனே சமந்தா ,”என்னைய பண்ணிட்டான்” என பதில் வசனம் பேசுகிறார் இதை இந்த படத்திற்கான புரோமோவாக வெளியிடுகிறார்கள். நயன்தாரா இந்துவாம் சமந்தா முஸ்லிமாம் இவன் மகளை யாராவது இப்படி செய்தால்… என இப்படியாக ட்வீட் செய்துள்ளார் இப்போது இந்த டீவீட்டிற்கு கீழ் பல இணையதள வாசிகள் இது ஒரு படம் தானே படத்தை படமாக பாருங்கள் ஏன் அதில் மதத்தை திணிகிறீர்கள் என்று அவரை கலாய்த்து வருகின்றனர். இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் படம் வெளியாக தடை வருமா என்றெல்லாம் செய்தி ஒருபுறம் பரவ தொடங்கியுள்ளது.
