தளபதி விஜயின் 66 வது படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 66 படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இரண்டு நாட்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரில் விஜய் மாஸ் & கிளாஸ் ஆக இருக்கிறார்.


ரசிகர்களும் இந்த லுக்கினை பாராட்டி வருகின்றனர். இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து குஷ்பூ, சரத்குமார், ஷாம் போன்றோர்கள் நடிக்கின்றனர்.
ஏற்கனவே வெளிவந்த பிஸ்ட் படம் சரியாக போகாததால் ரசிகர்கள் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் எனவே இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வருகிற பொங்கல் அன்று திரைக்கு வரலாம் என கூறி வருகின்றனர்.
