சென்னை சாஸ்திரி பவனில் மகளிர் தின விழாவை கொண்டாடினர். அதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு உரையை தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு தேவை நமக்கு எப்படி ஆடை கட்டுவதில் சுதந்திரம் இருக்கிறது என்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அது போன்று தான் நம்மை சுற்றி உள்ளவர்களும் நினைப்பார்கள். அதனால் உடுத்தும் ஆடைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர் மகளிர் தினம் என்பது ஒரு நாள் மட்டுமல்ல எல்லா நாளும் மகளிர் போற்றப்பட வேண்டியவர்கள் தான்.
ஆண்களுக்கு கட்டுப்பாடு என்பது வீட்டில் வைப்பது இல்லை. பெண்களுக்கு மட்டுமே வீட்டிற்கு சீக்கிரம் வர வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆண்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தால் தான் பெண்களிடம் அவர்கள் சரியாக நடந்து கொள்வார்கள் என்று கூறிய அவர்,
பெண் சுதந்திரம், பெண்ணுரிமை என்பது ஆடையில் அல்ல. நான் நன்றாகப் படிப்பேன், நான் வளர்ச்சியடைவேன், நான் நல்ல வேலைக்கு செல்வேன் என்று சுதந்திரமாக செயல்படுவதுதான் சுதந்திரமே தவிர மன சங்கடம் மற்றும் முகச்சுளிப்பை ஏற்படுத்தும் ஆடைகளை அணிந்து செல்வது பெண்ணுரிமையயோ பெண்சுதந்திரமோ அல்ல.
அதனால் பெண்ணுரிமையை யாரும் தப்பாக புரிந்து கொள்ள வேண்டாம் முதலில் ஆடை உடுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் எப்படிப்பட்ட ஆடையை வேண்டுமானாலும் உடுத்தி கொள்ளலாம் என்பது பெண்ணுரிமை அல்ல என்று எடுத்துரைத்தார்.