சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்ற எம்பிரஸ் என்ற சொகுசு கப்பல் தற்போது திருப்பி அனுப்பபட்டிருக்கிறது
சென்னை துறைமுகத்திலிருந்து எம்பிரஸ் என்ற சொகுசு கப்பல் ஆனது அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த 4ஆம் தேதி அதன் துவக்கவிழா நடைபெற்றது. தொடர்ந்து சென்னை துறைமுகத்தில் இருந்து அந்த சொகுசு கப்பல் நேற்று இரவு புறப்பட்டு புதுச்சேரிக்கு இன்று காலை வந்தடைந்தது. புதுச்சேரியில் நான்கு மைல் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த கப்பலில் வந்து கேளிக்கை மற்றும் மதுபான விடுதி மற்றும் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக சீர்கேடுகள் உண்மை நிகழ்வுகள் நடைபெறும் என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த சொகுசு கப்பல் பல்வேறு எதிர்ப்புகளை மீறியும் இன்று காலை புதுச்சேரிக்கு வந்தடைந்தது. இந்த கப்பலுக்கு அனுமதி அளிக்கப்படாது இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த நிலையில் இந்த சொகுசு கப்பலானது, புதுச்சேரிக்கு வந்தடைந்தது. தற்போது புதுச்சேரி பகுதியில் உள்ள கடல் பகுதியில் இந்த கப்பல் நின்று கொண்டிருந்த போது புதுச்சேரி கடற்படை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புதுச்சேரி கடற்பகுதிக்குள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் உடனடியாக கப்பல் கடலுக்கு எடுத்துச் செல்லுமாறு அவர் கூறியதை அடுத்து தற்போது இந்த கப்பலானது ஆழ்கடல் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதுச்சேரியில் இந்த கப்பலுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் அனுமதி இல்லாத சூழலில் வந்த கப்பல் தற்போது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலானது அடுத்து புதுச்சேரிக்கு வருமா இல்லையா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.