தஞ்சை பெரிய கோவிலை பற்றி அறியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது என்ற அளவிற்கு வானளாவிய புகழ் பெற்றது தஞ்சை பெரிய கோவில். ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவில் நிறைய மர்ம ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் வேறு உலகத்திற்கு செல்லும் வழி. இதைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தொகுப்பை இப்பொழுது நாம் காண இருக்கிறோம்.
அறிவியல் கூற்றுப்படி இந்த பூமியானது மூன்று டைமென்ஷன் கொண்டது எனவும் இது தவிர வேறு உலகங்கள் 11 டைமென்ஷன் வரை கொண்டது என்றும் கூறப்படுகிறது. அதேபோல நாம் பூமியிலிருந்து வேறு உலகத்திற்கு செல்ல சில ரகசிய பாதைகள் உள்ளதாகவும் அதை நமது சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து உள்ளனர் என்றும் அந்த பாதை வழியாக சித்தர்கள் பல உலகங்களுக்கு பயணித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தற்பொழுது கூட சித்தர்கள் பலர் அந்த பாதை வழியாகத்தான் பூமிக்கு வருகின்றனர் என்றும் அந்த பாதையானது தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் இருப்பதாகவும் அது கண்ணுக்குத் தெரியாத ஒரு மாயையான பாதை என்றும் கூறப்படுகிறது. அந்த பாதை ஒருவர் கண்ணுக்கு தெரிந்தால் அவர் வேறு உலகத்திற்கு இதில் பயணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது போன்ற ஒரு பாதை தான் தஞ்சை பெரிய கோவிலில் இன்று வரை பாதுகாப்பாக உள்ளது என்றும் அந்த பாதை வழியாக பல மகான்கள் அவ்வப்போது அந்த கோவிலுக்கு வந்து இறைவனை தரிசித்து செல்கின்றனர் என்றும் கூற்று நிலவுகிறது.
