கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் நடிகை ஒருவர் பிக் பாக்கெட் அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் மிகப்பெரிய சர்வதேச புத்தக கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அங்கு மக்கள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். அப்படி நேற்று மக்கள் அதிகமாக அந்த இடத்தில் தென்பட்டனர். அப்போது அங்கு சிலருடைய பர்ஸ் காணாமல் போனதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தது இதையடுத்து அங்கு விரைந்த போலீஸ் அங்கு நடந்ததை விசாரிக்க, முப்பதுக்கும் மேற்பட்டவர்களின் பர்ஸ் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதனால் புத்தக கண்காட்சியின் கேட்டை முழுவதுமாக மூடி எல்லோரையும் பரிசோதனை செய்தனர்.
அப்போது அந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்ததும் நடிகை ரூபா தத்தா சந்தேகத்திற்குரிய விதத்தில் குப்பைத்தொட்டியில் எதையோ போட்டு மறைக்கிறார். அப்போது அவரை கண்காணித்ததில் அவர்களது ஹாண்ட் பேக்கில் 10 பர்ஸ்கள் மறைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதை போலீசார் பார்த்து எடுத்துள்ளனர் அதில் 65 ஆயிரம் ரொக்கம் உள்ளது. பிறகு அந்தப் பர்ஸ்களை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொடுத்துவிட்டு ரூபா தத்தாவை போலீசார் கைது செய்தனர். இதே போன்று பல முறை பல இடத்தில கை வரிசையை காட்டியுள்ளார். பிக் பாக்கெட் அடித்த பணத்தை தினமும் டைரியில் குறித்து வைக்கும் பழக்கமும் அவர்க்கு உள்ளதாம். இன்று அவரை கொல்கத்தா கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.