தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வார்டு வாரியாக தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் கன்னியாகுமரி இரணியல் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் 12 வார்டுகள் பாஜக அமோக வெற்றி பெற்று இருக்கிறது.
அவர்கள் போட்டியிட்ட இரணியல் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக போன்ற எந்த பெரும்பான்மை கட்சிகளும் ஒரு வார்டில் கூட பெறவில்லை என்பதுதான் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
இரணியல் பேரூராட்சியில் பாஜகவை அடுத்து சுயேட்சை 2 வார்டிலும், நாம் தமிழர் 1 வார்டிலும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இரணியல் பேரூராட்சி வார்டு வாரியாக ஓட்டு எண்ணிக்கை பின்வருமாறு :-
வார்டு 1- நாம் தமிழர் – 170
வார்டு 2 – சுயேட்சை – 264
வார்டு 3 – சுயேட்சை – 87
வார்டு 4 – பாஜக – 146
வார்டு 5 – பாஜக – 253
வார்டு 6 – பாஜக – 258
வார்டு 7 – பாஜக – 188
வார்டு 8 – பாஜக – 111
வார்டு 9 – பாஜக – 123
வார்டு 10 – பாஜக 359
வார்டு 11 – பாஜக 178
வார்டு 12 – பாஜக – 154
வார்டு 13 – பாஜக – 200
வார்டு 14 – பாஜக – 186
வார்டு 15 – பாஜக – 218