கள்ளக்குறிச்சி பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 296 பேரில் 70 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவு வழங்கினார், ஏன் ஜாமீன் வழங்கினார் தெரியுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கக்கூடிய தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. பல போராட்டங்கள் மற்றும் பல கலவரங்கள் நடந்தன அதனை அடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி எடுத்துக்கொண்டது, இந்த கலவரத்தில் ஈடுபட்டதற்கு மூன்று குற்றவியல் எடுக்கப்பட்டிருந்தது, 236,237,238 இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் குறிப்பிட்ட நபர்கள் கைதுசெய்ப்பட்டார்கள் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இதுவரை 322 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள், அதில் 96 பேர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்கள், இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. நேற்று இந்த இந்த வழக்கு நீதிபதி பூர்ணிமா தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் கடுமையாகுற்றச்சாட்டை வைத்தார் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கக்கூடிய 45 பேர் கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் நீதிபதி 45 பேரின் மனுவை தள்ளுபடி செய்கிறார்கள், இந்த வழக்கில் முன்னதாகவே 19 சிறார்கள் ஜாமினில் விட்டுள்ளார். மீதமுள்ளவர்களை ஒரே பிரிவின் கீழ் 70 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவு வழங்கியுள்ளார்கள் நாளை மீதமுள்ள 108 பேருக்கான ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும், இதில் ஜாமீன் வழங்கப்பட்ட 70 பேர் கல்லூரி மாணவர்கள் எனவும் இவர்கள் சம்பவ இடத்தில இல்லை எனவும் ஆதாரம் தெரிவிக்கப்பட்ட நிலையில் 70 பேருக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்
