நேற்று இரவு தீடீரென்று மாரடைப்பு காரணமாக கிரிக்கெட் உலகின் சுழற்பந்து ஜாம்பவான் வார்னே உயிரிழந்தார். கிரிக்கெட் உலகமே இவரின் இழப்பை கண்டு அதிர்ந்து போனது ஏனென்றால் இவரின் தீடீர் மரணம் யாரும் ஏற்கமுடியாது ஒன்றாக அமைந்தது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலரும் அவர்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் இன்று இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தொடக்கத்தில் இரண்டு நிமிடம் வார்னேவுக்காக மவுன அஞ்சலி செலுத்தினர். மைதானத்தில் சில ரசிகர்கள் கண்ணீர் விட்டும் அழுதனர்.
இந்தியா வீரர் ஜடேஜாவுக்கு வார்னே இழப்பு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் ஏனென்றால் ஜடேஜாவுக்கு ராக்ஸ்டார் என்னும் பட்டத்தை கொடுத்தவர் வார்னே தான். இதுகுறித்து பதிவிட்ட ஜடேஜா அவரின் இழப்பாயி நம்பமுடியவில்லை இறைவனை பிறராதிக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
விராட் கோலியம் தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்வில் என்ன நடக்கும் என்பதை கணிக்கவே முடியவில்லை. கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான் இன்று இல்லை என்பதை என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என பதிவிட்டிருந்தார்.
ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், என் மனம் எப்படி வாடி இருக்கிறது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது, எங்கள் விளையாட்டின் மிகப்பெரிய ஜாம்பவான் இன்று விடைப்பெற்றுள்ளார். இன்னும் இது பொய்யாக இருக்கக்கூடாதா என்று மனம் கேட்கிறது எனக் பதிவிட்டிருந்தார்.