பிரபல மல்யுத்த ஆட்டக்காரர் தி கிரேட் காளி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
உலக அளவில் மிகப்பெரிய பிரபலமான நிகழ்ச்சிதான் டபிள்யூ டபிள்யூ ஈ (WWE) என்று அழைக்கப்படும் மல்யுத்த ஆட்டம் இதற்கு உலகமெங்கும் பலதரப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதில் பிரபலமானவர் தான் இந்தியாவை சேர்ந்த தாலிப் சிங் ராணா என்று அழைக்கப்படும் கிரேட் காளி. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு சிறுவயதிலிருந்தே மல்யுத்த ஆட்டத்தில் மிகவும் நாட்டம் அதிகம் அதனால் கையில் இருந்த போலீஸ் அதிகாரி வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக மல்யுத்த ஆட்டத்தில் களம் இறங்க முடிவு செய்தார்.
பிறகு டபிள்யூ டபிள்யூ ஈ என்று அழைக்கப்படும் அந்த மல்யுத்த ஆட்டத்தில் கலந்து கொண்டார் அதன் மூலமாக இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இவருடைய ஒரிஜினல் பெயர் ராணா சிங் என்பதையே மறந்து தி கிரேட் காளி என்று ரசிகர்களிடம் அன்பாக அழைக்கப்பட்டார். பல பாலிவுட் ஹாலிவுட் படங்களிலும் டிவி விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தற்போது பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த சமயத்தில் அதே பஞ்சாப்பை சேர்ந்த இவர் இப்போது பாஜகவில் இணைந்துள்ளது பாஜகவிற்கு மேலும் வலுவை கூட்டியிருக்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடிய போது கிரேட் காளி அங்கு சென்று அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி பாஜகவை அந்த நேரத்தில் விமர்சித்தார்.
அப்போது விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜகவை விமர்சித்த கிரேட் காளி இன்று அதே பாஜகவில் இணைந்து இருப்பது ஒருவிதமான சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

இதனை அடுத்து தற்போது பாஜக தலைவர்கள் ரத்தோர் உள்ளிட்ட பலரும் கிரேட் காளிக்கு மாலை அணிவித்து பாஜகவில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பாஜகவில் இணைந்த பிறகு தி கிரேட் காளி பத்திரிக்கை செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
பாஜகவில் தற்போது நான் இணைந்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது பாரத பிரதமர் திரு மோடி ஜி அவர்களின் கொள்கைகளை நான் பின்பற்ற கடமைப்பட்டிருக்கிறேன் தற்போதைய சூழலில் நாட்டை ஆள்வதற்கு அவர்தான் சரியான நபர். பாஜகவின் தேசிய கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு அதனால் தற்போது பாஜகவில் நான் இணைந்துள்ளேன்” என்று நிருபர்களிடம் கூறினார்.