இந்திய வீராங்கனைகள் பாகிஸ்தான் வீராங்கனையின் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மகளிருக்கான உலக கோப்பை லீக் ஆட்டம் நேற்று நடந்தது அதில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியது முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 244 ரன் எடுத்தது. இரண்டாவதாக களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை சரிந்ததால் 108 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மாபெரும் வெற்றியை பெற்றது. ஆட்டம் முடிந்து இரு அணி வீராங்கனைகளும் சந்தோஷமாக பேசி மகிழ்ந்துள்ளனர்.
அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா மஹரூப் அவரின் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு மைதானத்திற்குள் வந்துள்ளார். அப்போது அந்த கைக்குழந்தையுடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சிய படி விளையாடிய ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதற்க்கு பிறகு அந்த குழந்தையுடன் அனைத்து இந்திய வீராங்கனைகளும் போட்டோவும் எடுத்து கொண்டனர். என்னதான் எதிரி நாடுகள் என்றாலும் அன்பை வெளிப்படுத்தும் போது எல்லோருமே சமம் என்பதை உணர்த்தி இந்த விடியோவை பார்க்கும் அனைவரையும் நெகிழ்ச்சி படுத்தி இருக்கிறது இந்த சம்பவம்.
Bismah Maroof's legacy will go far beyond her achievements on the field. In a society that often tells women to make choices between career and family, she's showing that you can have both! Such an inspiring person.https://t.co/Vp7EB2iwKd
— Aatif Nawaz (@AatifNawaz) March 6, 2022