அடேங்கப்பா….. பாகுபலி புகழ் பிரபாஸ் படத்தின் வசூலை முறியடித்த தி லெஜெண்ட்

பாகுபலி புகழ் பிரபாஸ் படத்தின் வசூலை முறியடித்த தி லெஜெண்ட்

தி லெஜெண்ட் திரைப்படம் சென்ற வியாழக்கிழமை திரையிடங்களில் வெளியானது. இந்த படத்தில் பிரபல தொழிலதிபரான சரவணன் அருள் நடித்துள்ளார். மேலும் இவருக்கு இணையாக ஊர்வசி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 20 கோடிகளை சம்பளமாக வாங்கி உள்ளார் அந்த நடிகை. முதல் படத்திலேயே 20 கோடி வாங்குவதும், தமிழ் திரை உலக வரலாற்றில் ஒரு நடிகை இவ்வளவு சம்பளம் வாங்குவதும் இதுவே முதல் முறையாகும். அப்படிப்பட்ட நயன்தாராவே அவருடைய அதிகபட்ச சம்பளமாக 10 கோடி வரை தான் பெற்று வருகிறார்.

அதனால் இவரின் 20 கோடி கோலிவுட் வட்டாரத்தில் பெரிய விஷயமாக கருதப்பட்டது. தற்போது இடைத்தொடர்ந்து என்னதான் இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் நல்ல முன்னேற்றத்தை தான் கொடுத்து வருகிறது. மேலும் இந்த படத்தில ஹாரிஸ் ஜெயராஜ் பாடலும் முதுகெலும்பாக அமைந்தது. இந்த படத்திற்கு ஒரு ரஜினி படம் எப்படி விளமபரப்படுத்தப்படுமோ அப்படி விளம்பரங்களை செய்தனர். தற்போது இந்த படம் கேரளாவில் முதல் நாளில் பிரபாஸ் படத்தில் வசூலையும் முறையடித்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.

லெஜெண்ட் பட நடிகைக்கு நயன்தாராவை விட டபுள் மடங்கு சம்பளம் | இத்தனை கோடிகளா ?

அதாவது பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதேஷியாம் அவருடைய கேரியரில் மிகப்பெரிய ஒரு தோல்வி படமாக அமைந்தது. சுமார் 100 கோடிக்கும் மேல் அந்த படம் இழந்து மிகதோல்வியை சந்தித்தது. இப்படிப்பட்ட இந்த திரைப்படம் கேரளாவில் முதல் நாளில் மட்டும் 4 லட்சங்களை மட்டும் தான் வசூலித்தது. தற்போது சரவணன் அருள் நடித்து வெளிவந்திருக்கும் தி லெஜெண்ட் 4.7 லட்சம் பெற்று இருக்கிறது. இதை தற்போது பெரிதாக பேசப்படுகிறது. மேலும் இது என்னென்ன சாதனைகளை முறியடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Spread the love

Related Posts

IPL Auction 2022 | மீண்டும் சென்னைக்கு வந்த ராபின் உத்தப்பா | விலை போகாத ரெய்னா.

ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம்

“காசு ஏமாத்துறாங்க…. யாரையும் நம்பாதீங்க …. ” பிலிப்பைன்ஸ் நாட்டில் வீடியோ போட்டு கதறும் குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி புகழ் அவர்கள் என்னை வைத்து சில நிறுவனங்கள் காசு சம்பாதிக்கிறார்கள் நான்