சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டாத ரசிகர்களால் நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் பாமகவினர் தமிழ்நாட்டில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் போலீஸ் பாதுகாப்புகள் நிறைய திரையரங்குகளில் குவிக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற மாவட்டங்களில் அதிகாலை காட்சிகளை காண ரசிகர்கள் குவிந்து இருந்தாலும், சிறிய மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் வரவில்லை என்பதுதான் உண்மை.
நாமக்கல்லில் 10 மணி காட்சி தான் முதல் காட்சியாக தொடங்க பட்டது அந்த காட்சிகளிலும் சிறிய அளவு கூட்டமே காணப்பட்டது. இதற்கு காரணம் வேலை நாட்களில் படம் ரிலீஸ் செய்தது தான் என்று ஒரு தரப்பு கூறுகிறது. இந்தப் படத்திற்கு தற்போது நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது, அதனால் வார இறுதி நாட்களில் இந்த படத்தை காண வரும் கூட்டம் அதிகரிக்கும் என்றே சினிமா வட்டாரம் கணிக்கிறது.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

இதன்படி நாமக்கல் திரையரங்குகளில் அசம்பாவிதம் ஏதும் நடந்து விட கூடாது என்பதற்காக அதிகம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். படம்பார்க்க வரும் ரசிகர்களை காட்டிலும் போலீஸ்களே திரையரங்குகளில் அதிகமாக உள்ளனர்.
பாமக ஆராஜகத்தால், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்பட காட்சி ரத்து