கலகலப்பு படத்தில் மிர்சி சிவா நகைகளை திருடிக் கொண்டு செல்லும் வழியில் ஒரு ஓட்டையில் மாற்றிக்கொள்வார். அதே போன்ற ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. திருடன் கோவிலில் நகைகளை திருடி விட்டு வெளியே செல்லும்போது ஒரு ஓட்டை பகுதியில் மாடிகொண்டுள்ளன்.

கலகலப்பு திரைப்படம் நாம் அனைவரும் பார்த்து கொண்டாடிய ஒரு காமெடி திரைப்படம். அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் சிவா ஒரு வீட்டில் நகைகளை கொள்ளை அடித்துவிட்டு, ஒரு ஜன்னல் ஓட்டை வழியாக வெளியே வந்து விடலாம் என்று எண்ணி அந்த ஓட்டைக்குள் உடம்பை நுழைக்க போது அவரின் பாதி உடம்புதான் வெளியே வரும் மீதி உள்ளே மாட்டிக் கொள்ளும். அதே போல் ஒரு போலீஸ் காரரும் அந்த படத்தில் மாட்டி கொள்வார். இந்த காட்சிகள் சிரித்த கொண்டாடி மகிழும் காட்சி.

அதே போன்று ஒரு சம்பவம் தெலுங்கானா ஸ்ரீகாகுளம் மாவட்டதில் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு எல்லம்மாள் கோயிலில் நகைகளைத் திருடி விட்டு தப்பிக்க நினைத்த திருடன் தப்பிக்கும் போது ஒரு ஓட்டையில் மாட்டிக் கொண்டுள்ளார். இரவு முழுவதும் அந்த ஓட்டையிலேயே சிக்கித் தவித்த அவனை மறுநாள் காலையில் மக்கள் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவனை அங்கிருந்து மீட்டு பத்திரமாக போலீசிடம் ஒப்படைத்தனர். கலகலப்பு திரைப்படத்தைப் போல நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் வேடிக்கையும் ஏற்படுத்தியது.