Latest News

அஜித்தின் துணிவு படத்தின் டி.வி ஒளிபரப்பு உரிமையை தட்டி தூக்கிய கலைஞர் டிவி | அதோடு தியேட்டர் உரிமையை உதயநிதி பெற்றுள்ளார்

அஜித்தின் துணிவு படத்தின் தியேட்டர் விநியோகத்தையும் சேட்டிலைட் விநியோகத்தையும் உதயநிதி தரப்பு வாங்கி இருக்கிறது என தகவல்கள் வெளிவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் தான் அஜித் இவர் இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் இணைந்து ஏற்கனவே இரண்டு படங்களை நடித்திருக்கிறார். அந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷனை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி ஒன்று சேருகிறது. அந்த படத்திற்கு சென்ற வாரம் தான் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு படத்துடைய டைட்டில் துணிவு என்று அறிவித்தனர்.

அனிருத் வீட்டில் நடந்த துயரம் | சோகத்தில் தமிழ் சினிமா

இந்த படத்தினுடைய போஸ்டரும் டைட்டலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு டீவீட்டின் கீழே ஒரு மில்லியன் கமண்டுகளை அடித்து அஜித் ரசிகர்கள் புதிய சாதனையும் படைத்தனர். அந்த அளவிற்கு ஒரு நல்ல வரவேற்பு இருக்கும் இந்த படத்திற்கு ரிலீஸ் தேதி எப்போது என அனைவரும் ஆவலாக காத்திருந்தனர். தற்போது இந்த படத்தின் வெளியீடு அடுத்த வருடம் பொங்கல் என கூறி வருகின்றனர். வாரிசு படமும் பொங்கல் அன்றுதான் வெளியாகிறது என கூறி வந்தனர்.

தற்போது அந்த படமும் விஜயின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. தற்போது இந்த படத்தின் சேட்டிலைட் விநியோகத்தை கலைஞர் டிவி பெற்றிருப்பதாகவும் திரைப்பட விநியோகம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி தரப்பு வாங்கி இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு உதயநிதி மற்றும் கலைஞர் டிவி அஜித்துடன் இணைந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

அண்ணாமலை டென்ஷன் – காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்..அண்ணாமலை கொடுத்த விளக்கம்

தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி.

பிரதமர் மோடிக்கு உணவுக்காக செலவிடப்படும் தொகை என்ன ? | அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியா பிரதமர் மோடியின் உணவு செலவுகளுக்காக அரசின் பணத்தில் ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்திக் கொள்ளவில்லை

ஒரு பிள்ளைக்கு இரண்டு தாய் ? | 100 ஆண்டுகளுக்கு மேல் தீர்ப்பு கிடைக்காத புரியாத புதிர் கொண்ட வழக்கு | இதன் பின்னணி என்ன ??

இந்த உலகில் பல விசித்திரமான மர்மங்களும் விடை தெரியாத சில விடயங்களும் இன்றளவும் உலவிக் கொண்டுதான்

Latest News

Big Stories