புது பட ரிவியூ | தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

படத்துடைய கதை பெருசா நான் சொல்லி தான் தெரிய வேண்டும் என்று அவசியம் கிடையாது. ட்ரெய்லர்லயே அவங்க ரிவில் பண்ணிட்டாங்க. தனுஷ் இருக்காரு அவருக்கு கூடவே பிரண்டா நித்யா மேனன் இருக்காங்க. இடையில் அவருக்கு இரண்டு லவ் வருது. அதுக்கப்புறம் அப்பா பையன் சண்டை தாத்தா பேரன் பாசம் அவ்வளவுதான் இது மிக்ஸ்ட் ஆஹ் அடிச்சு கதை பண்ணி இருக்காங்க. அத தவிர்த்து பெருசா கதைன்னு சொல்ல எதுவும் இல்ல. ஆனால் திரைக்கதை எப்படி பண்ணி இருக்காங்கன்னு அது தான் கேள்வி.

படத்துல நடிச்ச எல்லாருடைய பர்ஃபாமென்ஸ், தனுஷ் & நித்யா மேனன் முதல் பாதி முழுக்க இவங்க ரெண்டு பேரும் மட்டும் தான் வராங்க. அவங்களும் அவங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்த நல்லா பண்ணிட்டாங்க. தனுசுக்கு அப்பாவ வர்ற பிரகாஷ்ராஜ் பாரதிராஜா அப்படின்னு எல்லாருமே அவங்க ரோல் னால பண்ணிட்டாங்க அடுத்து ஒரு முக்கிய பலம் படத்துக்கு வந்து இசை இந்த படத்திற்கு சில இடங்களை தூக்கிப் பிடிக்க ரொம்பவே உதவுகிறது. பேக்ரவுண்ட் ஸ்கோர் மியூசிக் அதுக்கப்புறம் படத்துல வர மொத்த டெக்னிக்கல் ஒர்க் எடிட்டிங், கேமரா எல்லாமே ஒரு ரொமாண்டிக் ஃபேமிலி டிராமா படத்திற்கு எப்படி தேவையோ அப்படி கச்சிதமா பண்ணிட்டாங்க.

எதற்காக இந்திய அணியில் கேப்டன்கள் மாறிக்கொண்டே வருகின்றனர் ? | கங்குலி அளித்த விளக்கம்

மேகம் கருகாத பெண்ணா அந்த பாட்டு தான் படத்துல முதல் பாதில வருது அந்த ஒரு பாட்ட தவிர வேற எந்த ஒரு பாட்டுமே நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்ணல, படத்தோட கதை கூடவே தான் பாடல்கள் பயணிக்குது. அதனால எந்த விதமான தோய்வோ ஸ்லொவ்ன்ஸ் நமக்கு தெரியவே இல்ல. கதையும் விறுவிறுப்பா அங்கங்க கொஞ்சம் எமோஷனல் டச் ஓடவே நகரிச்சு. இன்டர்வெல் சீன்லையும் ஒரு சின்ன விஷயத்த இவங்க வச்சிருக்காங்க.

இரண்டாம் பாதில அந்த இன்டர்வெல் சீனில் இருந்து கண்டின்யூ பண்ணுவாங்களான்னு பார்த்தா, உடனே கதை வந்து வேற இடத்துக்கு போகுது. சரின்னு அதுக்கப்புறம் இந்த கதையாவது ஒழுங்கா எடுத்துட்டு போவாங்களா பார்த்தா அதுலயும் ஒரு முட்டுக்கொடுத்து கதை நின்றுது ஆனா கிளைமாக்ஸ் முன்னாடி கதை இதுதான்னு சொல்லி தெளிவு படுத்திட்டாங்க.

இவங்க சொல்ல வந்த விஷயம் ஓகே ஆனா சொல்லப்பட்ட விதத்தில் கொஞ்சம் இவங்க ஹோம் வொர்க் பண்ணி இருந்தா நல்லா இருந்திருக்கும் என்பது ஒரு கருத்து.

படத்துல தனுஷ் & நித்யா மேனன் அவங்க வந்து பிரண்ட்ஸா வராங்க அவங்களுடைய அந்த ஒரு பாட்டு தான் வந்து படத்துல பார்க்க நல்லாவும் இருக்கு அழகாகவும் இருக்கு. அது தவிர மத்த எதுவுமே படத்தோட கனெக்ட் ஆகல சில இடமெல்லாம் எதுக்கு தேவையில்லாம வெச்சாங்கன்னு தான் தோணுச்சு. அவங்கள தவிர்த்துட்டு பாரதிராஜா தனுஷ் பார்ட் கூட ஓரளவுக்கு ரசிக்கும்படி இயக்குனர் எடுத்து இருந்தாரு.

ஒட்டு மொத்தமா தனுஷ் படம் ஒன்றரை வருஷம் கழிச்சு தியேட்டர்ல வெளியாகி இருக்கு பாக்கணும் நினைக்கிறவங்க போய் பாருங்க.

Kingwoods Rating :- 3.5/5

Spread the love

Related Posts

கர்ப கால போட்டோ வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திய காஜல்

நடிகை காஜல் அகர்வால் ஒரு தொழிலதிபரை கல்யாணம் செய்து கொண்டு படத்தில் நடிப்பதில் இருந்து அவ்வப்போது

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் | கூகுள் பே மூலம் 2 லிட்டர் சாராயம் வாங்கினால் அரைலிட்டர் இலவசம் | தமிழகத்துக்கு இப்படி ஒரு நிலமையா ?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூகுள் பே மூலம் கலாச்சாராயம் விற்பனை அமோகமாக நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்