“முஸ்லிம்களிடம் சங்கி சேட்டை செய்வது போல தலித்துகளிடம் செய்யாதீர்கள்” – எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த திருமா

மத்தியில் ஆட்சி இருந்தால் உங்களால் எங்கள் கட்சியை தடை செய்து விட முடியுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச். ராஜாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலைக்காக 12 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த கேனல் திலீபன் நினைவு நாள் சென்னையில் உள்ள அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருமாவளவன் மரியாதை செலுத்தி அதன் பிறகு பேச ஆரம்பித்தார். அப்போது பேசிய அவர்

“ஈழம் இல்லையேல் தமிழர்களுக்கு விடிவே இல்லை. மேலும் பிராமண இந்துவாக இருக்கும் எச் ராஜா விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என பேசி வருகிறார். எங்கு சென்றாலும் விடுதலை சிறுத்தைகள் மட்டும் தான் அவர் கண்களுக்கு தெரிகிறது. எங்கு போய் பேட்டி கொடுத்தாலும் தீய சக்தி திருமாவளவன் என்ன பேசுகிறார். நீ தீய சக்தி என்று என்னை சொன்னால் நான் சரியாகத் தான் இருக்கிறேன் என பொருள். நீ என்னை நல்ல சக்தி என்று சொல்லிவிட்டால் நான் சனாதன சங்கியாக மாறிவிட்டேன் என்பதற்கு பொருள்.

“விசிக கட்சியை ரத்து செய்து திருமாவளவனை கைது செய்ய வேண்டும்” – எச் ராஜா ஆவேச பேச்சு

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை விதிக்க வேண்டும் என கூறுகிறீர்கள் டெல்லியில் உங்கள் ஆட்சி இருந்தால் என்ன வேணாலும் செய்து விட முடியுமா ? ஒன்றை மட்டும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் முஸ்லிம்களிடம் விளையாடுவது போல தலித்துகளிடம் நீங்கள் விளையாட முடியாது. அதற்காக முஸ்லிம்களை நான் குறைத்து பேசுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். அது சங்கிகளின் சேட்டை சங்கிகளின் திட்டம். அம்பேத்கரை பகைத்துக் கொள்ள யாராலும் முடியாது. அதேபோன்று தலித்துகளையும் பகைத்துக் கொள்ள யாராலும் முடியாது. வெளிப்படையாக அரசியல் சட்டத்தை யாராலும் பகைத்து கொள்ள முடியாது. ஏனென்றால் 35 கோடிக்கும் மேல் உள்ள மக்கள், இரண்டாவது அம்பேத்கரை குலதெய்வமாக 365 நாளும் கொண்டாடுவது வழக்கம்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கேரளா போலீசாரால் அதிரடி கைது | விவரம் என்ன ?

எச் ராஜாவை நாங்கள் பொருட்படுத்துவதே கிடையாது. ஏழை எளிய மக்களுக்கு நான் தூய சக்தியாக தான் தெரிவேன். அதேபோல சனாதன பிராமண இந்துவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ராஜா ஒரு தீய சக்தியாகவே தான் தெரிவார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் கைது செய்யப்பட வேண்டும். இந்த சம்பவங்களில் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் சேர்ந்த நபர்கள் இருக்கிறார்களா என்று கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை செய்தால் நன்றாக இருக்கும்” என கூறினார்.

Spread the love

Related Posts

விஜய் பிறந்தநாளையொட்டி கோவையில் வானதி ஸ்ரீநிவாசன் தலைமையில் விஜய் ரசிக மன்ற நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர் | காரணம் என்ன ?

விஜய் பிறந்த நாள் அன்று விஜய் ரசிகர்கள் வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். தற்போது

“ஆ.ராசா வாகிய நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், அனால் எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் ?” – மீண்டும் ஆரம்பித்த ஆ ராசா

இந்துக்களைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசா அவர்கள் மன்னிப்பு கேட்கிறேன் என்பது போல கூறி

வெற்றிகரமாக 3-ஆவது மனைவியுடன் சேர்ந்து தனது 9-ஆவது குழந்தையை பெற்றெடுத்த டெஸ்லா உரிமையாளர் எலன் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலன் மஸ்க்க்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. எலன் மஸ்க் அவர்கள்