அதிக அளவில் தலித் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
2021 இல் தமிழ்நாட்டில் 53 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் 61 தலித்துகளை கொலை முயற்சி செய்ய முற்பட்டிருக்கின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தலித் படுகொலைகளின் 2020 ஆம் ஆண்டு ஐந்தாவது இடத்தை தமிழ்நாடு பிடித்து இருக்கிறது. இப்போது ஏழாவது இடத்தில் இருக்கிறது. தலித் பெண்கள் மீதான தாக்குதலில் துன்புறுத்துவது தரை குறைவாக பேசுவது என்று குற்றங்களை விடவும் தலித் பெண்கள் கற்பழிக்கப்படுவது தமிழ்நாட்டில் அதிகமாக வளர்ந்துள்ளது. தலித்துகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதில் தமிழ்நாடு காவல்துறை மெத்தனமாக இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. 2020ல் பதிவு செய்யப்பட்டு இந்த ஆண்டின் இறுதிவரை புலன் விசாரணை செய்யப்படாமல் இருந்த வன்கொடுமை வழக்குகள் 694 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்புக்கு பெண் கேட்டு சென்று அசிங்கப்பட்ட டி.ராஜேந்தர் ?

காவல்துறை மெத்தனமான போக்கை கொண்டுள்ளதால் வன்கொடுமைகள் அதிகரிக்கிறது என்று ஆவண காப்பகம் அறிக்கை புலப்படுத்துகிறது. இதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்தில் கொண்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளே இல்லாத மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
