பிக்பாஸ் விக்ரமனால் பாதிக்கப்பட்ட பெண், கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றுள்ள நிலையில், மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளரும்கூட.
இவர்மீது பாலியல் மற்றும் மோசடி என 2 விதமான புகார்கள் கிளம்பி உள்ளது, விக்ரமன் தன்னை காதலிப்பது போல் நடித்து, பாலியல் சுரண்டல் மற்றும் பண மோசடி செய்ததாக பெண் வக்கீல் கிருபா முனுசாமி புகாரை கூறியிருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். அத்துடன், விக்ரமன் தன்னிடம் வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் பேசியதை அத்தனை ஸ்கிரீன்ஷாட்களையும் வெளிப்படையாகவே பகிர்ந்திருந்தார்.

மேலும், தன்னைப்போல் 15 பெண்களை விக்ரமன் ஏமாற்றி இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் கிருபா முனுசாமி. இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தன்னுடைய புகாரை மனுவாக தந்திருக்கிறார். AD அந்த புகார் மனுவில், “கடந்த இரண்டரை ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தி தொடர்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமனும், நானும் நெருக்கமாகப் பழகி வந்தோம். விக்ரமன் என்னை காதலிப்பதாக சொன்னார்.
15 பெண்களை ஏமாற்றியுள்ளாரா விசிக விக்ரமன் ? | பரபரப்பு குற்றசாட்டு வைத்த காதலி
அவரிடம் என்னை சட்டரீதியாகத் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதை ஏற்கவில்லை. அவர் என்னைக் காதலிப்பதாக சொல்லி ரூ.13.7 லட்சம் பணம் வாங்கி அதில் ரூ.12 லட்சத்தைத் திருப்பி கொடுத்துவிட்டார். இன்னும் ரூ.1.7 லட்சம் திருப்பி தர வேண்டும். அவர் மீது என்னைக் காதலிப்பதாக சொல்லி மோசடி செய்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையிடம் புகார் கொடுத்தேன். அவர்கள் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே விக்ரமன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னை சாதியின் பெயரைச் சொல்லி இழிவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதுடன், இப்போது வேறொரு பெண்ணை காதலித்து வருவதாகவும் புகாரில் கூறியிருக்கும் பெண் வழக்கறிஞர், விசிக நிர்வாகி என்பதால், அக்கட்சியின் மேலிடத்தில் புகார் அளித்தபோது, தன்னிடம் வாங்கிய 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயில், 12 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்த நிலையில், ஆனால் கட்சி சார்பில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

விக்ரமன் மறுப்பு: ஆனால், கிருபா முனுசாமி சொல்லும் குற்றச்சாட்டுக்கு விக்ரமன் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தார்.. தற்போது கமிஷனர் ஆபீசில் புகாரை கொடுக்கவும், இதற்கு விக்ரமன் பதிலளித்துள்ளார். “நானும் கிருபாவும், நல்ல நண்பர்களாக பழகி வந்தோம் என்பதே உண்மை. நான் அவரை காதலிப்பதாக சொல்லவுமில்லை, நெருக்கமான தொடர்பும் வைக்கவில்லை. அவரிடம் நான் ரூ.11 லட்சம் பணம் வாங்கினேன். ஆனால் ரூ.12 லட்சம் திருப்பி கொடுத்து விட்டேன்.

நான் அவருக்குப் பணம் எதுவும் கொடுக்க வேண்டியது இல்லை. என் மீது கொடுத்துள்ள புகார் தவறானது என்பதால் சட்டரீதியாக சந்திப்பேன்” என்று தெரிவித்துள்ளார். எனினும், பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் கொடுத்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.. அடுத்தக்கட்டமாக இதுகுறித்து விக்ரமனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது..

அறிக்கை எங்கே: ஏற்கனவே, இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள கௌதமசன்னா, சந்திரகுமார், கனல்விழி, சுந்தரவள்ளி மற்றும் செம்மலர் என்ற ஐந்து நிர்வாகிகளை ஒரு குழுவாக அமைத்து புகார் கொடுத்த மற்றும் புகார் சுமத்தப்பட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த இரண்டு விசாரணைகளையும் பதிவு செய்து 15 நாட்களுக்குள் விசாரணை முடிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது.

அதில், கையெழுத்திட்டு போட்டுள்ளாராம். இதுகுறித்துதான் பாதிக்கப்பட்ட பெண்ணும் கேள்வி எழுப்பி வருகிறார். “ஒரு மாத காலத்துக்கு மேலாகியும், அந்த அறிக்கை குறித்த தகவல் தெரியவில்லை.. அறிக்கை என்ன ஆனது? விக்ரமனுக்கு எதிரான புகார்கள் உண்மையானது என்று அந்த அறிக்கை வந்ததாக கேள்விப்பட்டேன்.

விசிக: அதோடு அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் அதில் சொல்லப்பட்டதாக தெரிகிறது. அதனால்தான் திருமா என்னிடம் அந்த அறிக்கையை காட்டாமல் இருக்கிறாரா? என்று 2 நாட்களுக்கு முன்பு திருமாவளவனுக்கு கிருபா கேள்வி எழுப்பியிருந்தார்..

அதுமட்டுமல்ல, விக்ரமன் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி உள்ள நிலையில், அவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு திருமாவளவன் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகவும் சோஷியல் மீடியாவில் செய்திகள் கசிந்த நிலையில், விக்ரமன் விவகாரம் தற்போது விசிகவிலும் அனலடிக்க துவங்கி உள்ளது. பெண் வழக்கறிஞர் + விக்ரமன் என இரு தரப்புமே தங்கள் தரப்பு நியாயத்தை தொடர்ந்து முன்வைத்து வரும்நிலையில், போலீசார்தான் இந்த விஷயத்தில் உண்மைத்தன்மையை வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
After having undergone a great deal of agony over the past few months & a huge disappointment, I'm writing in public. I've known @RVikraman since 2013 when he participated in an event in which I was a guest. When I left for London in Aug 2020, he voluntarily came to send me off. pic.twitter.com/AA2rTxagZm
— Kiruba Munusamy (@kirubamunusamy) July 16, 2023